வீட்டிலேயே ரசகுல்லா செய்ய எளிமையான ரெசிபி... இன்னைக்கே டிரை பண்ணி பாருங்க...
வீட்டிலேயே ரசகுல்லா செய்ய எளிமையான ரெசிபி... இன்னைக்கே டிரை பண்ணி பாருங்க...
ரசகுல்லா
என்னதான் அந்த ரசகுல்லாவில் இருக்கு என்று கேட்டால்... அதெல்லாம் ஃபீல் பண்ணி சாப்பிட்டு பார்த்தால்தான் தெரியும் என்பார்கள்... அப்படி மெய் மறந்து ரசகுல்லாவை சுவைக்கும் விரும்பிகளுக்காகவே இந்த ரெசிபி.
ரசகுல்லா விரும்பிகளுக்கு அதன் பேரைக் கேட்டாலே நாவின் மொட்டுகள் தாளம் போட ஆரம்பித்துவிடும். சிலர் வாரத்தில் ஒருமுறையேனும் வாங்கி சாப்பிட்டுவிடுவார்கள். அப்படி என்னதான் அந்த ரசகுல்லாவில் இருக்கு என்று கேட்டால்... அதெல்லாம் ஃபீல் பண்ணி சாப்பிட்டு பார்த்தால்தான் தெரியும் என்பார்கள்... அப்படி மெய் மறந்து ரசகுல்லாவை சுவைக்கும் விரும்பிகளுக்காகவே இந்த ரெசிபி.
தேவையான பொருட்கள் :
பால் - 1 லிட்டர்
சர்க்கரை - 1 கப்
எலுமிச்சை சாறு - 2 tbsp
செய்முறை :
பாலை தண்ணீர் ஊற்றாமல் நன்கு காய்ச்சிக்கொள்ளுங்கள். பின் சூடாக இருக்கும்போதே அதில் எலுமிச்சை சாறை பிழிந்துவிடுங்கள்.
உடனே இப்போது பால் திரிந்து போகும். அதை அப்படியே ஒரு வெள்ளை பருத்தி துணியில் ஊற்றி நன்கு வடிகட்டிக்கொள்ளுங்கள்.
இப்போது அந்த துணியில் பனீர் போல் கெட்டியாக பால் திரிபு கிடைக்கும். அதை நன்கு பிசைந்து மாவு போல் உருட்டிக்கொள்ளுங்கள். இப்போது சிறு சிறு உருண்டைகளாக பிடியுங்கள்.
இந்த சமயத்தில் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து சர்க்கரையை பாகுக்கு காய்ச்சிக்கொள்ளுங்கள்.
சற்று கெட்டிப்பதம் வரும்போது உருண்டைகளை அதில் போட்டு சிறு தீயில் 5 நிமிடங்கள் கொதிக்கவிடுங்கள். பின்பு அடுப்பை அணைத்துவிடுங்கள்.
அவ்வளவுதான் குங்குமப்பூ இருந்தால் கொஞ்சம்போல் தூவி பரிமாறுங்கள்.
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.