எந்த உணவுக்கும் பொருந்தும் ராஜ்மா குழம்பு : பஞ்சாபி சுவையில் இதோ ரெசிபி..!

இது எலும்புகளை வலுபெறச் செய்யும். புற்றுநோய் செல்களையும் அழிக்கும், இரத்ததில் சர்க்கரை அளவைக் குறைக்கவும், கொழுப்பைக் குறைக்கவும் உதவும் என மருத்துவர்கள்

எந்த உணவுக்கும் பொருந்தும் ராஜ்மா குழம்பு : பஞ்சாபி சுவையில் இதோ ரெசிபி..!
ராஜ்மா குழம்பு
  • News18 Tamil
  • Last Updated: September 11, 2020, 1:42 PM IST
  • Share this:
இரத்ததில் சர்க்கரை அளவைக் குறைக்கவும், கொழுப்பைக் குறைக்கவும் உதவும் ராஜ்மாவை வாரம் ஒரு முறையேனும் சமைத்து சாப்பிடுங்கள். இது எலும்புகளை வலுபெறச் செய்யும். புற்றுநோய் செல்களையும் அழிக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

வேக வைக்க


ராஜ்மா - 1 கப்
பிரிஞ்சு இலை - 1
பட்டை - 1உப்பு -1 tsp

சமைக்க

நெய் - 1 1/2 tbsp
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 3
சீரகம் - 1/2 tsp
வெங்காயம் - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 tsp
பச்சை மிளகாய் - 1
தக்காளி - 2
மஞ்சள் - 1/4
மிளகாய் தூள் - 1 tsp
தனியா தூள் - 1 tsp
சீரகத்தூள் - 1 /2 tsp
மேங்கோ பொடி - 1/2 tsp
கரம் மசாலா - 1/2 tsp
உப்பு - 1/2 tsp
கசூரி மேத்தி - 1 tsp
கொத்தமல்லி - சிறிதளவுசெய்முறை :

ராஜ்மாவை இரவு ஊற வைத்துவிடுங்கள். 12 மணி நேரம் ஊற வேண்டும்.

மறுநாள் குக்கரில் போட்டு பட்டை, இலை, உப்பு சேர்த்து 6 விசில் வர வேக வையுங்கள். தண்ணீர் கொட்டை மூழ்கும் வரை ஊற்றினால் போதும்.

வெந்ததும் தனியா வைத்துவிடுங்கள்.

சமைக்க கடாய் வைத்து நெய் விட்டு பட்டை , கிராம்பு , சீரகம் சேர்த்து பொறித்ததும் வெங்காயம் , இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.

ஹெல்தியான காலை உணவுக்கு இன்ஸ்டண்ட் அவல் வாழைப்பழம் கீர்

வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்குங்கள். தக்காளி வதங்கி சுருங்கியதும் கொடுக்கப்பட்ட பொடிகள் அனைத்தையும் சேர்த்துகொள்ளுங்கள்.

சிறிது நேரம் வதக்கியதும் வேக வைத்த ராஜ்மாவை தண்ணீருடன் அப்படியே ஊற்றுங்கள். பின் கலக்கிவிட்டு உப்பு சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

பின் தட்டுபோட்டு மூடி 5 நிமிடங்களுக்கு கொதிக்க வையுங்கள். தண்ணீர் வற்றி குழம்பு பதத்திற்கு கெட்டியானதும் கசூரி மேத்தியை கையில் கசக்கிப் போட்டு பின் கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள்.

அவ்வளவுதான் ராஜ்மா குழம்பு பஞ்சாபி சுவையில் தயார். இதை சப்பாத்தி, சாதம் என எதற்கும் சாப்பிடலாம்.

 

 

 
First published: September 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading