• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • மழைக்கால நோய்களுக்கு நிவாரணம் தரும் இந்த ரசத்தை குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்...

மழைக்கால நோய்களுக்கு நிவாரணம் தரும் இந்த ரசத்தை குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்...

கற்பூரவல்லி அல்லது ஓமவல்லி ரசம் இது இருமல், சளி, ஜலதோஷம், நெஞ்சுச்சளி, தொண்டைப்புண், காய்ச்சல் போன்றவற்றைக் குணப்படுத்தும் தன்மைகொண்டது. இதைப் பொதுவாகவே வெறுமனே மென்று, தின்று வெந்நீர் குடிப்பது அல்லது சாறு எடுத்து தேன் கலந்து சாப்பிடுவது வழக்கம்.

  • Share this:


    துளசி ரசம்... இது சளி, தொண்டைக்கட்டு, காய்ச்சல், உடலில் உள்ள நச்சுத்தன்மை உள்ளிட்டவற்றை சரிசெய்யும். துளசியை வெறுமனே மென்று சாப்பிடுவது, சாறு எடுத்து தேன் கலந்து சாப்பிடுவது என இருந்தாலும் இந்த மழைக்கு ரசமாக்கிச் சாப்பிடுவது பலன் தரும்.

    தேவையானவை:

    துளசி இலைகள் - ஒரு கப்

    மிளகு - இரண்டு டீஸ்பூன்

    சீரகம், துவரம் பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்

    தனியா - ஒரு டீஸ்பூன்

    புளி - எலுமிச்சை அளவு

    பெருங்காயத்தூள், கடுகு, கறிவேப்பிலை, எண்ணெய் - சிறிதளவு

    உப்பு - தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும்.

    செய்முறை:

    முதலில் மிளகு, சீரகம், தனியா, துவரம் பருப்பை சிறிது நேரம் ஊறவைத்து அரைத்துக்கொள்ளவும். துளசியைத் தனியாக அரைத்துக்கொள்ளவும். நன்றாக ஊறவைத்த புளியைக் கரைத்து உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கொதிக்கவிட்டு அரைத்த மிளகு, சீரகம் உள்ளிட்ட கலவையைச் சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் அரைத்த துளசியைச் சேர்த்து நுரை வந்ததும் இறக்கவும். எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்துச் சேர்த்தால் கமகமக்கும் துளசி ரசம் தயார்.

    துளசி


    கற்பூரவல்லி ரசம்

    கற்பூரவல்லி அல்லது ஓமவல்லி ரசம் இது இருமல், சளி, ஜலதோஷம், நெஞ்சுச்சளி, தொண்டைப்புண், காய்ச்சல் போன்றவற்றைக் குணப்படுத்தும் தன்மைகொண்டது. இதைப் பொதுவாகவே வெறுமனே மென்று, தின்று வெந்நீர் குடிப்பது அல்லது சாறு எடுத்து தேன் கலந்து சாப்பிடுவது வழக்கம். இன்னும் சிலர் மாலை நேரங்களில் கடலைமாவில் தோய்த்து பஜ்ஜி செய்து சாப்பிடுவார்கள். ஆனால், ஓமவல்லியில் ரசம் செய்து சாப்பிட்டால் மழைக்கால நோய்களுக்கு நிவாரணம் தரும்.

    மேலும் படிக்க... வாயில் போட்டதும் கரையும் சாஃப்ட் சப்பாத்தி ரகசியம் என்ன தெரியுமா?

    இனி மஷ்ரூம் குருமா இப்படி வைத்து பாருங்கள்...

    ஆட்டு தலைக்கறி குழம்பு செய்வது எப்படி?

    சப்பாத்திக்கு சூப்பரான சைடிஸ் இதுதான்!

    தேவையானவை: 

    ஓமவல்லி இலைகள் - ஒரு கைப்பிடி,




    புளி - எலுமிச்சை அளவு,

    பூண்டுப் பற்கள் - மூன்று

    தக்காளி - இரண்டு

    பச்சை மிளகாய் - இரண்டு

    காய்ந்த மிளகாய் - ஒன்று

    மஞ்சள்தூள் - சிறிதளவு

    கடுகு - ஒரு டீஸ்பூன்

    பெருங்காயத்தூள்

    கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிதளவு

    நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்

    தனியா, மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்,

    கடலைப் பருப்பு - கால் டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு





    செய்முறை: இந்த ரசத்தை வழக்கமான மற்ற ரசம்போலவே செய்யலாம். ஆனால் பச்சை மிளகாயுடன் ஓமவல்லி, பூண்டு சேர்த்து அரைத்து ஊற்றி இறக்கினால் தொண்டைக்கு இதம் தரும் ஓமவல்லி ரசம்.

    மேலும் படிக்க... சிக்கன் பிரைடு ரைஸ்!

    தந்தூரி சிக்கன் வீட்டிலேயே சுலபமாக செய்ய ரெசிபி...

    சுவையான சுறா புட்டு செய்வது எப்படி?

    சிக்கன் நூடுல்ஸ் வீட்டிலேயே செய்வது எப்படி?


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: