இரும்புச் சத்து கொண்ட கேழ்வரகு மாவில் ’கார குழிப்பணியாரம்’ - சூப்பர் ரெசிபி

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் என்பதால்தான் ஆடி மாதம் வரும் நோயை தவிர்க்க கூழ் ஊற்றி படையலிடுகின்றனர்.

இரும்புச் சத்து கொண்ட கேழ்வரகு மாவில் ’கார குழிப்பணியாரம்’ - சூப்பர் ரெசிபி
கார குழிப்பணியாரம்
  • Share this:
கேழவரகு இரும்புச் சத்து, நார்ச்சத்து நிறைந்த உணவு. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் என்பதால்தான் ஆடி மாதம் வரும் நோயை தவிர்க்க கூழ் ஊற்றி படையலிடுகின்றனர். அதில் வித்யாசமாக கேழ்வரகுப் பணியாரம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பணியார மாவு தயாரிக்க :


கேழ்வரகு - 1 கப்
புழுங்கல் அரிசி - 3/4 கப்
இட்லி அரிசி - 3/4 கப்உளுத்தம் பருப்பு - 1/4 கப்
உப்பு - தே.அ

பூரணம் செய்ய :

எண்ணெய் - 1 tbsp
கடுகு - 1 tsp
கடலை பருப்பு - 1
உளுத்தம் பருப்பு
மிளகு - 1 tsp
உப்பு - தே.அ
வெங்காயம் - 2
இஞ்சி - 1/2 துண்டு
பச்சை மிளகாய் - 1-2
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - பணியாரம் சுட தே.அசெய்முறை :

மாவுக்காக கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை 4 மணி நேரம் ஊற வைத்து பின் மைய அரைத்துக்கொள்ளுங்கள். தண்ணீர் அதிகம் ஊற்றாதீர்கள். இட்லி சுடும் பதத்தில் மாவு இருக்க வேண்டும்.

தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துகொள்ளுங்கள். அவ்வளவுதான் குழிபணியாரத்திற்கான மாவு தயார்.

பூரணம் செய்ய கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளியுங்கள். பின் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு , மிளகு சேர்த்து வதக்குங்கள்.

பருப்பு பொன்னிறமாக வந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். . பின் இஞ்சி , பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள்.

வெங்காயம் கண்ணாடி போல் மாறியதும் கொத்தமல்லி தழை தூவி உப்பு சேர்த்து பிறட்டி சிறிது நேரம் வதக்கியபின் அடுப்பை அணைத்துவிடுங்கள்.

தற்போது வதக்கிய வெங்காயத்தை மாவில் கொட்டி கலக்குங்கள். அவ்வளவுதான் குழிப்பணியாரத்திற்கு மாவு தயார்.

அடுத்து குழிப்பணியார கல் வைத்து அதன் ஒவ்வொரு குழியிலும் எண்ணெய் ஊற்றுங்கள்.

காய்ந்ததும் அதற்குள் மாவை ஊற்றுங்கள். தட்டு போட்டு மூடி சிறிது நேரம் கழித்து திறந்து பாருங்கள். பின் மறுபுறம் திருப்பிப் போடுங்கள்.

இருபுறமும் வெந்ததும் எடுத்துவிடுங்கள். அவ்வளவுதான் கேழவரகு கார குழிப்பணியாரம் தயார்.

இதற்கு பொருத்தமான சட்னி வைத்து சாப்பிட்டுப் பாருங்கள். அட்டகாசமாக இருக்கும்.
First published: July 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading