முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கேழ்வரகு இட்லி செய்வது எப்படி..?

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கேழ்வரகு இட்லி செய்வது எப்படி..?

நீரிழிவு நோயாளிகளை காக்கும் கேழ்வரகு இட்லி

நீரிழிவு நோயாளிகளை காக்கும் கேழ்வரகு இட்லி

நீரிழிவு நோய்க்கு முதியவர்கள் மட்டும் அல்ல, இளைஞர்களும் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். ஆரோக்கியமான உணவு முறை மூலம் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நாட்டில் மக்கள் தொகை அதிகரிப்பதை போல, சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. நீரிழிவு நோய்க்கு முதியவர்கள் மட்டும் அல்ல, இளைஞர்களும் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். ஆரோக்கியமான உணவு முறை மூலம் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கலாம். அந்த வகையில், சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கேழ்வரகு இட்லி எப்படி செய்யலாம் என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

கேழ்வரகு – ஒரு கப்.

இட்லி அரிசி – அரை கப்.

உளுந்து – அரை கப்.

கேரட் - 2.

வெந்தயம் – 1 டேபிள் ஸ்பூன்.

சமையல் சோடா - கால் ஸ்பூன்.

கொத்தமல்லி தழை - 1 கொத்து.

உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

முதலில், கேழ்வரகு, இட்லி அரிசி, உளுந்து ஆகியவற்றை தண்ணீரில் அலசி, குறைந்தது 5 மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும்.

பின்னர், அவற்றை ஒரு மிக்ஸி அல்லது கிரைண்டரில் சேர்த்து, இட்லி மாவு பதத்திற்கு நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும். அதாவது அரை கூழ்ம நிலைக்கு அரைத்துக்கொள்ளவும்.

பின்னர் அரைத்த மாவினை, ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக்கொள்ளவும். இதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து பாத்திரத்தை மூடி தனியே எடுத்து வைக்கவும். இதை குறைந்தது ஒரு நாள் இரவு முழுவதும் இந்த மாவு கலவை அப்படியே வைத்துவிடவும்.

Also Read | உங்களுக்கு காய்ச்சல் அடிக்கும்போது எந்த மாதியான உணவு உட்கொள்வது நல்லது..?

மறுநாள் காலை மாவு நன்கு புளித்து இருக்கும். நன்கு புளித்த இந்த மாவினில் சிறிதளவு சமையல் சோடா மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, இட்லி சுடுவதற்கு ஏற்றார் போல் தயார் செய்துக்கொள்ளவும்.

இதற்கிடையில், நமக்கு தேவையான கேரட்டினை சுத்தம் செய்து, துருவி எடுத்துக்கொள்ளவும். அதேப்போன்று கொத்தமல்லி தழைகளையும் பொடியாக நறுக்கிகொள்ளவும்.

தற்போது இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, தண்ணீர் ஊற்றி சூடேற்றுங்கள். தண்ணீர் கொதிக்கும் நிலையில், இட்லி தட்டில் கேழ்வரகு மாவினை ஊற்றி, அதன் மீது சிறிதளவு கேரட், கொத்தமல்லி தழைகளை தூவி நன்கு வேகவிடவும்.

பொதுவாக அரிசி மாவு இட்லியை அவிப்பதற்கு 7 நிமிடங்கள் வரை பிடிக்கும். அதே கேழ்வரகு இட்லியை அவிக்க, 15 நிமிடங்கள் வரை பிடிக்கும். முறையாக தயார் செய்த இந்த இட்லியை உங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு சட்னி மற்றும் சாம்பாருடன் பரிமாற வேண்டியது தான்.

First published:

Tags: Food recipes, Healthy Food, Idly podi, Ragi