முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கேழ்வரகு மாவில் ஆப்பம் கூட சுடலாமா..? செய்வதற்கு தேவையான பொருட்களை தெரிந்துகொள்ளுங்க...

கேழ்வரகு மாவில் ஆப்பம் கூட சுடலாமா..? செய்வதற்கு தேவையான பொருட்களை தெரிந்துகொள்ளுங்க...

கேழ்வரகு ஆப்பம்

கேழ்வரகு ஆப்பம்

எப்போதும் பச்சை அரிசியில் ஆப்பம் சுட்டு சாப்பிட்டதுதான் வழக்கமாக இருக்கும். ஆனால் இனி இப்படி கேழ்வரகு மாவில் ஆப்பம் சுட்டு செய்து சாப்பிட்டுப்பாருங்கள். இது ஆரோக்கியம் அதேசமயம் ருசியும் இருக்கும்.

  • Last Updated :

இப்போது மக்களிடையே உணவின் மீதான விழிப்புணர்வு அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம். எது சாப்பிட்டாலும் அதில் என்ன நன்மை உள்ளது என்பதை தெரிந்துகொள்கின்றனர். அந்த வகையில் தினை வகைகளையும் தினசரி உணவாக சாப்பிடத் தொடங்கிவிட்டனர். இது உடல் எடையை குறைப்பது, நீரிழிவு நோய், கொழுப்பு கட்டுப்பாடு என பல நன்மைகளை தருவதால் இதுவே அவர்களின் ஆரோக்கிய உணவாக மாறிவிட்டது.

அந்த வகையில் எப்போதும் பச்சை அரிசியில் ஆப்பம் சுட்டு சாப்பிட்டதுதான் வழக்கமாக இருக்கும். ஆனால் இனி இப்படி கேழ்வரகு மாவில் ஆப்பம் சுட்டு செய்து சாப்பிட்டுப்பாருங்கள். இது ஆரோக்கியம் அதேசமயம் ருசியும் இருக்கும். சரி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

கேழ்வரகு – 1 கப்

சாதம் – 1/4 கப்

ஈஸ்ட் – 1/4 tsp

துருவிய தேங்காய் – 3/4 கப்

நாட்டுச்சர்க்கரை – 1 tsp

உப்பு – தே.அ

செய்முறை :

கேழ்வரகு மாவை சலித்து அதை ஒரு கடாயில் கொட்டி மிதமான தீயில் சூடேற பிரட்டி எடுத்துக்கொள்ளுங்கள். அதை ஆற வையுங்கள்.

பின் மிக்ஸியில் சாதம், தேங்காய், நாட்டுச்சர்க்கரை சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

இட்லிக்கு கறிக்குழம்பு சாப்பிடுவது மிகவும் பிடிக்குமா..? 15 நிமிடத்தில் செய்ய கமகம சிக்கன் மிளகு குழம்பு ரெசிபி...

தற்போது அதில் பிரட்டி வைத்துள்ள மாவையும் சேர்த்து கொஞ்சம் தண்ணீரும் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

தற்போது அதை ஒரு பாத்திரத்தில் கொட்டி ஈஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து கரைத்து மூடி ஓரமாக வையுங்கள். இது 6-8 மணி நேரம் ஊற வேண்டும்.

மறு நாள் நன்கு புளித்து மாவு தயார் நிலையில் இருக்கும். நன்கு கிளறி ஆப்ப சட்டியில் ஊற்றி சுட்டு எடுங்கள்.

top videos

    அவ்வளவுதான் கேழ்வரகு ஆப்பம் தயார். இதற்கும் தேங்காய்பால் சூப்பராக இருக்கும்.

    First published:

    Tags: Food, Ragi