தினமும் சப்பாத்தியா....இன்றைக்கு ருமாலி ரொட்டி செய்து பாருங்கள் : எத்தனை சாப்பிட்டாலும் அளவே தெரியாது
ருமாலி என்பதற்கு கைக்குட்டை என்று அர்த்தம். தமிழில் கைக்குட்டை ரொட்டி என்று பெயர்.

ருமாலி ரொட்டி
- News18 Tamil
- Last Updated: September 11, 2020, 2:20 PM IST
ருமாலி ரொட்டி பஞ்சாப், பாகிஸ்தான் பகுதிகளில் மிகவும் பிரபலமான உணவு. ருமாலி என்பதற்கு கைக்குட்டை என்று அர்த்தம்.
தமிழில் கைக்குட்டை ரொட்டி என்று பெயர். பெயரில் மட்டுமல்ல உண்மையிலேயே பார்க்க கைக்குட்டை போன்றுதான் மெல்லியதாக இருக்கும் . அதுமட்டுமன்றி அதை சுட்டு எடுத்ததும் கைக்குட்டை போன்றுதான் மடித்து வைப்பார்கள். சரி இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் மைதா - 2 கப்
கோதுமை மாவு - 1/4 கப்
உப்பு - 1 tspகாய்ச்சிய பால் - 3/4 கப்
நெய் - 2 tsp
எண்ணெய் - 2 tsp

செய்முறை :
ஒரு பாத்திரத்தில் மைதா, கோதுமை மற்றும் உப்பு சேர்த்து கலந்துகொள்ளுங்கள்.
பின் அதில் நெய் காய்ச்சி ஊற்றி பிசைந்துகொள்ளுங்கள். அடுத்ததாக ப் காய்ச்சிய பாலை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி பிசையுங்கள்.
நன்கு பிசைந்ததும் அதன் மேல் எண்ணெய் விட்டு மீண்டும் பிசையுங்கள்.
உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு புரதச்சத்து நிறைந்த அடை : என்னென்ன சேர்க்க வேண்டும் தெரியுமா..?
மாவு நன்கு மென்மையான பதத்திற்கு உப்பி வந்ததும் ஒரு ஸ்பூன் எண்ணெயை அதன் மேல் விட்டு தட்டுப்போட்டு அரை மணி நேரம் ஊற வையுங்கள்.
ஊறியதும் அதை எடுத்து ஒவ்வொரு உருண்டைகளாக உருட்டி மைதாவில் முக்கி எடுத்து திரட்டுங்கள். முடிந்த வரை மெல்லியதாக திரட்டுங்கள்.
இதற்கு தோசைக் கல்லிலும் சுடலாம் அல்லது கடாயை கவிழ்த்து போட்டு சுடலாம். அதாவது கடாயை நேராக வைத்து சூடாக்கிக்கொள்ளுங்கள். பின் அதை ஸ்டவ் மேல் கவிழ்த்துப்போட்டு உப்பு கலந்த தண்ணீரை சுற்றிலும் தெளித்துவிடுங்கள்.
செஃப் சஞ்சீவ் கபூரின் பச்சை பயறு ஓட்ஸ் டிக்கி : மாலையில் டீ டைம் ஸ்னாக்ஸுக்கு செய்து பாருங்கள்..!
பின் திரட்டிய மாவை இரண்டு கைகளிலும் மாறி மாறி திருப்பிப் போட்டால் மாவு இன்னும் மெலிதாக மாறும் பின் அதை அப்படிய கழித்துப்போட்ட கடாய் மேல் வைத்து ஒத்தி எடுங்கள். ஒத்தி எடுக்க பருத்தித் துணி பயன்படுத்துங்கள்.
ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பிப் போட்டு ஒத்தி எடுங்கள். மாவு வெந்திருக்கும். அவ்வளவுதான் இதுதான் ருமாலி ரொட்டி செய்முறை.
இதை வீட்டில் இருப்போருக்கு செய்து கொடுங்கள். அடிக்கடி கேட்பார்கள்.
தமிழில் கைக்குட்டை ரொட்டி என்று பெயர். பெயரில் மட்டுமல்ல உண்மையிலேயே பார்க்க கைக்குட்டை போன்றுதான் மெல்லியதாக இருக்கும் . அதுமட்டுமன்றி அதை சுட்டு எடுத்ததும் கைக்குட்டை போன்றுதான் மடித்து வைப்பார்கள். சரி இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்