• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • மதிய உணவுக்கு பொருத்தமாக இருக்கும் பூசணிக்காய் பச்சடி எப்படி செய்வது தெரியுமா..? ரெசிபி இதோ...

மதிய உணவுக்கு பொருத்தமாக இருக்கும் பூசணிக்காய் பச்சடி எப்படி செய்வது தெரியுமா..? ரெசிபி இதோ...

 பூசணிக்காய் பச்சடி

பூசணிக்காய் பச்சடி

பூசணிக்காய் நீர்ச்சத்து நிறைந்த காய் வகை என்பதால் உடலுக்கு நீரேற்றம் அளிக்கும். வாரம் ஒரு முறையேனும் இந்த பச்சடியை செய்து சாப்பிடுங்கள்.

  • Share this:
    பூசணிக்காய் பச்சடி மதிய உணவுக்கு பொருத்தமான சைட் டிஷ்- ஆக இருக்கும். இதை காரக்குழம்பு, குரும குழம்பு, சாத வகைகளுக்கும் தொட்டுக்கொள்ளலாம். சூப்பரான காம்போவாக இருக்கும். பூசணிக்காய் நீர்ச்சத்து நிறைந்த காய் வகை என்பதால் உடலுக்கு நீரேற்றம் அளிக்கும். வாரம் ஒரு முறையேனும் இந்த பச்சடியை செய்து சாப்பிடுங்கள்.

    தேவையான பொருட்கள் :

    தயிர் - அரை கப்
    எண்ணெய் - 1 tsp
    பச்சை மிளகாய் - 2
    தேங்காய் துருவல் - கால் கப்
    கடுகு - 1 tsp
    உளுத்தம்பருப்பு - 1 tsp
    பெருங்காயத்தூள் - 1/4 tsp
    கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    உப்பு - தே.அ



    செய்முறை :

    பூசணிக்காயை தோல் நீக்கி கடாயில் தண்ணீர் ஊற்றி வேக வையுங்கள்.

    வெந்ததும் அதில் உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கொதிக்க வையுங்கள்.

    பச்சை வாசனை போனதும் தனியாக மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு , உளுத்தம்பருப்பபு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து கொதிக்கும் பூசணிக்காயில் சேருங்கள்.

    சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும் காலிஃப்ளவர் சப்ஜி..! எப்படி செய்வது தெரியுமா?

    தண்ணீர் தேவையான அளவு வற்றியதும் இறக்கிவிடுங்கள். அது நன்கு ஆறியதும் அதில் தயிர், தேங்காய் துருவல் சேர்த்து கிளறிவிடுங்கள்.

    இறுதியாக கொத்தமல்லி தழை தூவி பரிமாறுங்கள். அவ்வளவுதான் பூசணிக்காய் பச்சடி தயார்.

     

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: