இரவு உணவுக்கு 'பரங்கிக்காய் அடை' : நொடியில் ரெடியாகும் ரெசிபி

பின் அவற்றை மிக்ஸியில் மொற மொறப்பாக அரைத்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு கொடுக்கப்பட்டுள்ள காய்கறிகள் அனைத்தையும் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள்.

இரவு உணவுக்கு 'பரங்கிக்காய் அடை' : நொடியில் ரெடியாகும் ரெசிபி
பரங்கிக்காய் அடை
  • News18 Tamil
  • Last Updated: September 28, 2020, 7:00 PM IST
  • Share this:
இரவு அல்லது காலை உணவிற்கு வித்யாசமாக செய்து சாப்பிட பரங்கிக்காய் அடை டிரை பண்ணி பாருங்க. அட்டகாசமான சுவையில் திருப்தியான உணவாக இருக்கும்.

தேவையான பொருட்கள் :

மாவு அரைக்க


இட்லி அரிசி - 1 கப்
கடலை பருப்பு - 1/4 கப்
துவரம் பருப்பு - 1/4 கப்வெந்தையம் , சோம்பு - 3/4 tsp
பெருங்காயம் - 1 சிட்டிகை
உப்பு - தே.அ
காய்ந்த மிளகாய் - 5-8

காய்கறிகள்

வெங்காயம் - 1/2 கப்
பரங்கிக்காய் - 1 கப்
கொத்தமல்லி - கையளவு
கறிவேப்பிலை - 1/4 கப்
எண்ணெய் - அடை சுட



செய்முறை :

அரிசி மற்றும் பருப்பு என மாவு அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை 3-4 மணி நேரம் ஊற வையுங்கள்.

பின் அவற்றை மிக்ஸியில் மொற மொறப்பாக அரைத்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு கொடுக்கப்பட்டுள்ள காய்கறிகள் அனைத்தையும் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள்.

அவற்றை மாவுடன் கலந்து நன்கு கலக்குங்கள். தேவையான அளவு உப்பு போட மறவாதீர்கள்.

மாவு கெட்டிப் பதத்தில் இருக்கட்டும் அப்போதுதான் அடை நன்றாக வரும்.

காரசாரமான சுவையில் பச்சை மிளகாய் குருமா - இதோ ரெசிபி..!

மாவு தயார் அடை சுட தோசைக் கல்லை வையுங்கள். கல் காய்ந்ததும் எண்ணெய்யை தடவி மாவை பதமாக ஊற்றி சுற்றுங்கள். பின்பு சுற்றிலும் எண்ணெய் ஊற்றுங்கள்.

அடியில் சிவந்ததும் மறு பக்கம் திருப்பிப் போடுங்கள். சிறு தீயில் வைத்தால் நன்க்கு சிவக்க வேகும். இல்லையெனில் கருகிவிடும்.

இப்படி ஒவ்வொன்றாக சுட்டுக் கொடுங்கள். வீட்டில் இருப்பவர்களும் ருசித்து சுவைப்பார்கள். இதற்கு தேங்காய் சட்னி, காரச்சட்னி பொருத்தமாக இருக்கும்.
First published: July 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading