வெயிலுக்கு உகந்த பரங்கிக்காய் குழம்பு : அருமையான சுவையில் செய்ய இதோ ரெசிபி...

வெயிலுக்கு உகந்த பரங்கிக்காய் குழம்பு : அருமையான சுவையில் செய்ய இதோ ரெசிபி...
பரங்கிக்காய் குழம்பு
  • Share this:
அடிக்கும் வெயிலுக்கு எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் வற்றிவிடுகிறது. எனவே தண்ணீரை மட்டும் பருகாமல் தண்ணீர் நிறைந்த காய்கறிகள், பழங்களை சாப்பிடுவதும் உடலுக்குத் தேவையான நீரேற்றத்தை அளிக்கும். அந்த வகையில் பரங்கிக்காயை வைத்து எப்படி குழம்பு செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பரங்கிக்காய் - 1 கப்


வாழைக்காய் - 1
பச்சை பட்டாணி - 1/4 கப்
பாசி பருப்பு = 1/4 கப்உப்பு - தே.அ
புளி தண்ணீர்- 1 கப்

அரைக்க :

தேங்காய் - 1 கப் துருவியது
மஞ்சள் - 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3

வித்தியாசமான சுவையில் நெத்திலி கருவாடு குழம்பு - ரெசிபி இதோ...

தாளிக்க :

எண்ணெய் - 2  tsp
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு



செய்முறை :

முதலில் அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்ஸியில் மைய அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். அடுத்ததாக குக்கரில் பரங்கிக்காய், வாழைக்காயை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 1 விசில் வந்ததும் இறக்கிவிடுங்கள்.

விசில் பிரஷர் தானாக இறங்கியதும் மூடியைத் திறந்து அதை அப்படியே அடுப்பில் வையுங்கள். தற்போது அரைத்து வைத்துள்ள கலவையை போட்டு கலந்துவிடுங்கள். பச்சை பட்டாணியையும் போடுங்கள்.

காய்கறிகளே இல்லாத போது செய்து பாருங்கள் ’மசால்வடை குழம்பு’ - ரெசிபி இதோ...

தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள். அதோடு புளித்தண்ணீர் ஊற்றி கலந்து 5 நிமிடங்களுக்கு கொதிக்க விடுங்கள். தண்ணீர் வற்றி தேவையான குழம்பு பதம் வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.

இறுதியாக தாளிக்க கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு , காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை என சேர்த்து தாளித்து கொட்டுங்கள்.

அவ்வளவுதான் சுவையான பரங்கிக்காய் குழம்பு தயார்.

குறிப்பு : இந்தக் குழம்பிற்கு வாழைக்காயோடு விருப்பம் போல் எந்த காய்கறிகளையும் கதம்பமாக சேர்த்துக்கொள்ளலாம்.
First published: June 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading