ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

என்னைக்காவது மோர் குழம்பு இப்படி செஞ்சு சாப்பிட்டிருக்கீங்களா..?

என்னைக்காவது மோர் குழம்பு இப்படி செஞ்சு சாப்பிட்டிருக்கீங்களா..?

மோர் குழம்பு

மோர் குழம்பு

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  மோர் குழம்பு இப்படி செஞ்சு பாருங்க பாத்திரத்தில் குழம்பு மிஞ்சாது.

  தேவையான பொருட்கள் :

  தயிர் - 1/2 கப்

  பூசணிக்காய் - 250 கிராம்

  உப்பு - தே. அளவு

  மசாலா தயாரிக்க :

  உளுந்தம் பருப்பு - 2 Tsp

  வெந்தயம் - 1/4 Tsp

  காய்ந்த மிளகாய் - 5

  துருவிய தேங்காய் - 1 கப்

  தாளிக்க :

  தேங்காய் எண்ணெய் - 1 Tsp

  கடுகு - 1/2 Tsp

  உளுத்தம் பருக்கு - 1 Tsp

  கருவேப்பிலை - 1 ஸ்பிரிங்

  செய்முறை :

  முதலில் தேங்காய் மசாலா தயாரிக்க எண்ணெய் ஊற்றாமல் கடாயில் கொடுக்கப்பட்ட பொருளை பொன்னிறமாக வதக்கவும். ஆறியதும் மிக்ஸியில் மைய அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள். அதில் 1/2 கப் வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் கலந்துகொள்ளுங்கள்.

  பூசணிக்காயை குக்கரில் போட்டு கொஞ்சம் உப்பு, மஞ்சள் , 2 Tsp தண்ணீர் ஊற்றி 2 விசில் வரும் வரை காத்திருங்கள்.

  பாத்திரத்தில் தயிர் சேர்த்து , தேங்காய் மசாலா பேஸ்ட் கலந்து நன்கு கலக்கவும். அடுத்து வேக வைத்த பூசணிக்காயையும் சேர்த்துக்கொள்ளவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்துகொள்ளுங்கள்.

  எண்ணெய் கடுகு கருவேப்பிலை சேர்த்து தாளித்துமோர் குழம்பில் ஊற்றவும். தேவைப்பட்டால் குழம்பை ஒரு கொதி விடலாம். இல்லையெனில் அப்படியேவும் சாப்பிடலாம்.

  அவ்வளவுதான் சுவையான பூசணிக்காய் மோர் குழம்பு தயார்.

  பார்க்க :

  Published by:Sivaranjani E
  First published:

  Tags: Recipe