முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / புரோட்டீன் பவுடர் இல்லாமல் வீட்டிலேயே புரோட்டீன் ஷேக் தயாரிப்பது எப்படி..?

புரோட்டீன் பவுடர் இல்லாமல் வீட்டிலேயே புரோட்டீன் ஷேக் தயாரிப்பது எப்படி..?

புரோட்டீன் ஷேக்

புரோட்டீன் ஷேக்

protein shake : புரோட்டீன் ஷேக்குகளின் முக்கியமான பலன், தசை வளர்ச்சிக்கு உதவுவதாகும். அதனால் தான் ஜிம்மிற்கு செல்பவர்களும், தடகள போட்டிகள் மற்றும் பளுதூக்கும் வீரர்கள் புரோட்டீன் பவுடர்களை எடுத்துக்கொள்வார்கள்.

  • Last Updated :

மனித வாழ்க்கைக்கு புரதச்சத்து இன்றியமையாத ஒன்று. கார்போஹைட்ரேட்ஸ் மற்றும் கொழுப்புடன் சேர்த்து 3 முக்கிய நுண்ணூட்டச்சத்துக்களில் புரோட்டீனும் ஒன்றாகும். மேலும் இந்த சத்து ஒவ்வொரு மனித உயிரணுவின் கட்டுமான தொகுதி மற்றும் செல் செயல்பாட்டை ஒழுங்குபடுத்துகிறது. நம் ரத்தம் உடல் முழுவதும் ஆக்ஸிஜனை கொண்டு செல்ல புரோட்டின் உதவுகிறது.

தேவையான புரதச்சத்து உடலுக்கு கிடைக்காவிட்டால் சோர்வு, பிரெயின் ஃபாக் , காயத்திலிருந்து மெதுவாக மீள்வது உள்ளிட்டவற்றுக்கு வழிவகுக்கும். அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்ற பழமொழி அனைத்திற்குமே பொருந்தும் என்பது நமக்கு தெரியும். புரோட்டினும் அப்படி தான். நம் உடல் ஆரோக்கியத்திற்கு புரதம் நல்லது என்றாலும் கூட அதற்காக அளவுக்கு அதிகமாக உணவில் புரோட்டினை சேர்த்து கொள்ள கூடாது. நபரின் ஒரு கிலோ உடல் எடைக்கு ஒரு கிராம் அளவுக்கு புரோட்டீன் தேவை. அப்படிப்பட்ட புரோட்டீனை செயற்கையான பவுடர்களாக இல்லாமல் இயற்கையான முறையில் வீட்டிலேயே தயாரிக்கப்படும் புரோட்டீன் ஷேக்குகள் மூலமாக பெறுவது எப்படி என பார்க்கலாம்...

புரோட்டீன் ஷேக்கின் நன்மைகள் என்ன?

புரோட்டீன் ஷேக்குகளின் முக்கியமான பலன், தசை வளர்ச்சிக்கு உதவுவதாகும். அதனால் தான் ஜிம்மிற்கு செல்பவர்களும், தடகள போட்டிகள் மற்றும் பளுதூக்கும் வீரர்கள் புரோட்டீன் பவுடர்களை எடுத்துக்கொள்வார்கள். உணவு மூலம் போதுமான அளவு புரதச்சத்தை பெறுவது தசை முறிவைத் தடுப்பது, தசை வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவுகிறது.

நோய் அல்லது அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டவர்களுக்கு புரதத் தேவை அதிகரிப்பதால் உணவின் மூலமாக மட்டுமின்றி, புரோட்டீன் தேவைகளை பூர்த்தி செய்ய புரோட்டீன் பவுடர்களையும் எடுத்துக்கொள்ளலாம். புரோட்டீன் பவுடரை தண்ணீர் அல்லது பால் போன்ற திரவத்துடன் சேர்த்து தயாரிக்கப்படுவது புரோட்டீன் ஷேக் ஆகும். பொதுவாக ஒரு ஸ்கூப் புரோட்டீன் பவுடரில் 20-30 கிராம் புரதம் உடலுக்கு கிடைக்கிறது.இருப்பினும் நீங்கள் புரோட்டீன் பவுடர்களுக்குப் பதிலாக இயற்கையான பொருட்களை பயன்படுத்தி கூட புரோட்டீன் ஷேக்குகளை தயாரிக்கலாம்.

also read : கெட்ட கொழுப்பை குறைக்க உதவும் குயினோவாவில் அசத்தலான 5 ரெசிபிகள்!

புரோட்டீன் பவுடருக்கு மாற்று பொருட்கள்:

பால்: பசும் பால், வடிகட்டப்பட்ட அல்ட்ரா பால், பட்டாணி, சோயா மற்றும் சணல் பால்

பால் பொருட்கள்: கிரீக் யோகர்ட், பாலாடைக்கட்டி, ரிக்கோட்டா சீஸ், புரோபயோடிக் உணவான கெஃபிர்

சோயா பொருட்கள்: சோயா பீன்ஸ், சில்கன் டோஃபு, சோயா வெண்ணெய்,

கொட்டைகள் மற்றும் விதைகள் : வேர்க்கடலை, அக்ரூட் பருப்புகள், முந்திரி, பிஸ்தா, பாதாம், சணல் விதைகள், சியா விதை, ஆளிவிதை, பூசணி விதைகள், சூரியகாந்தி விதைகள்

தானியங்கள் மற்றும் பீன்ஸ்: ஓட்ஸ், குயினோவா, வெள்ளை பீன்ஸ், கருப்பு பீன்ஸ், பருப்பு

ஷேக்கில் புரோட்டீன் பவுடரை ஏன் தவிர்க்க வேண்டும்?

சில புரோட்டீன் பவுடர்களில் அதிகப்படியான சர்க்கரை அல்லது பிற இனிப்புகள் மற்றும் உங்களுக்கு ஒவ்வாமை கொடுக்க கூடிய பொருட்கள் இருக்கலாம்.

லேபிளில் பட்டியலிடப்பட்டுள்ளதை விட நச்சுகள் மற்றும் கன உலோகங்கள் வெவ்வேறு அளவுகள் அல்லது பொருட்களின் வகைகள் மாறுபடலாம்.

தடகள அமைப்புகளால் தடைசெய்யப்பட்ட வேதிப்பொருட்கள் கலக்கப்பட்டிருக்கலாம் என்பதால் புரோட்டீன் பவுடர்களை ஷேக் தயாரிக்க பயன்படுத்துவது பாதுகாப்பானது அல்ல.

பவுடர் இல்லாமல் வீட்டிலேயே ஈஸியாக தயாரிக்க கூடிய புரோட்டீன் ஷேக்குகள் இதோ!

also read : பாதாமி பழத்தை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத நன்மைகள் பற்றி தெரியுமா?

சாக்லேட் வாழைப்பழம் புரோட்டீன் ஷேக் (17 கிராம் புரதம்):

ஒரு மிக்ஸி பிளெண்டரில் கீழ் கண்ட பொருட்களை சேர்க்கவும்,

கிரீம் பாதாம் வெண்ணெய் - 2 டீஸ்பூன்

வாழைப்பழம் - 1

இனிப்பில்லாத கோகோ தூள் - 1 டீஸ்பூன்

வெண்ணிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்

பசு அல்லது சோயா பால் - 1 கப்

பீனட் பட்டர் மற்றும் ஜெல்லி ஷேக்: (22 கிராம் புரதம்)

உறைந்த பெர்ரி வகைகள் - 1 கப்

கிரீமி பீனட் பட்டர் - 2 டீஸ்பூன்

ரோல்டு ஓட்ஸ் - 2 டீஸ்பூன்

அரைத்த ஆளிவிதைகள் - 1 டீஸ்பூன்

பசு அல்லது பட்டாணி பால் - 1 கப்

also read : உடல் எடையை குறைக்க உதவும் 5 கடலை மாவு ரெசிபீஸ்..!

ஸ்ட்ராபெர்ரி ரிக்கோட்டா புரோட்டீன் ஷேக் (19 கிராம் புரதம்):

உறைந்த ஸ்ட்ராபெர்ரிகள் - 1 கப்

ரிக்கோட்டா சீஸ் - 3/4 கப்

தேன் அல்லது மேப்பிள் சிரப் - 2 டீஸ்பூன்

வெண்ணிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்

பசும் பால் - 3/4 கப்

அன்னாசி மற்றும் வெள்ளை சோயா பீன்ஸ் ஷேக் (32 கிராம் புரதம்):

உறைந்த அன்னாசிப்பழம் - 1/2 கப்

உறைந்த வாழைப்பழம் - 1/2 கப்

வேகவைத்த வெள்ளை பீன்ஸ் - 1/2 கப்

கிரீக் யோகர்ட் - 1/2 கப்

துருவிய தேங்காய் - 2 டீஸ்பூன்

top videos

    பசு அல்லது சோயா பால் - 1 கப்

    First published:

    Tags: Fitness, Protein