Home /News /lifestyle /

காரசார சுவையில் இறால் தொக்கு எப்படி செய்வது..?

காரசார சுவையில் இறால் தொக்கு எப்படி செய்வது..?

இறால் தொக்கு image source : monica's spice diary

இறால் தொக்கு image source : monica's spice diary

இறால் தொக்கு காரசாரமான சுவையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

இறால் -ஒரு பவுல்
சின்ன வெங்காயம் - 7
தக்காளி - 2
வெள்ளை பூண்டு - 5 பற்கள்
வெந்தையம் - 1 tsp
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
சீரகத் தூள் - 1 tsp
மிளகுத்தூள் - 1 tsp
மிளகாய் தூள் - 1 tsp
உப்பு - தே.அ
தேங்காய் பால் - 1/4 கப்
எண்ணெய் - தே.அ



செய்முறை :

இறாலை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.

கடாய் வைத்து எண்ணெய் விட்டு வெந்தையம் போடவும். பின் வெங்காயம் சேர்க்கவும். அதோடு பூண்டும் சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் தக்காளி சேர்க்கவும். நன்கு வதக்கி தக்காளி சுருங்கியதும் சுத்தம் செய்து வைத்துள்ள இறாலை சேர்த்து கிளறவும்.

கர்நாடகா ஸ்டைல் சிக்கன் குழம்பு : புது சுவையில் ட்ரை பண்ணி பாருங்க..!

பின் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தூள்களையும் சேர்க்கவும். கிளறிவிட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றுங்கள். உப்பு சேர்த்து சுவை பர்த்துக்கொள்ளுங்கள்.

தற்போது தட்டு போட்டு மூடி விடுங்கள். ஐந்து நிமிடம் தண்ணீர் கொஞ்சம் வற்ற கொதிக்க விடுங்கள். கொதித்ததும் தேங்காய் பாலை ஊற்றி கிளறி மீண்டும் 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கிவிடுங்கள். அவ்வளவுதான் சுவையான இறால் தொக்கு தயார்.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.









லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





பார்க்க :

 

 
Published by:Sivaranjani E
First published:

அடுத்த செய்தி