• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • இறால் முட்டை பொடிமாஸ் எப்படி செய்யனும் தெரியுமா..?

இறால் முட்டை பொடிமாஸ் எப்படி செய்யனும் தெரியுமா..?

இறால் முட்டை பொடிமாஸ்

இறால் முட்டை பொடிமாஸ்

இறாலை சுத்தம் செய்து தனியே வைத்துக்கொள்ளுங்கள்.  எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு பொறிக்கவும்.

  • Share this:
    இறால் தொக்கு, இறால் பிரியாணி என இறாலில் செய்யும் சமையலுக்கு தனிச்சுவை, தனி மணம் உண்டு. அந்தவகையில் முட்டை பயன்படுத்தி இறால் ஃபிரை செஞ்சு சாப்பிட்டிருக்கிறீகளா..?

    தேவையான பொருட்கள் :

    இறால் - 250 கிராம்
    கடுகு - 1 tsp
    எண்ணெய் - 2 tsp
    வெங்காயம் - 1
    தக்காளி - 1
    முட்டை - 2
    பச்சை மிளகாய் - 1
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/4 ஸ்பூன்
    மஞ்சள் பொடி - 1/2 tsp
    குழம்பு மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
    உப்பு - தே. அளவு
    கறிவேப்பிலை - சிறிதளவு



    செய்முறை :

    இறாலை சுத்தம் செய்து தனியே வைத்துக்கொள்ளுங்கள்.  எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு பொறிக்கவும்.

    அடுத்ததாக கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். சிறிது நேரம் கழித்து இஞ்சி பூண்டு பேஸ்ட் போடவும்.

    வதங்கியதும் தக்காளி போட்டு வதக்கவும். தக்காளி வதங்கியதும் சுத்தம் செய்து வைத்துள்ள இறால் போடவும்.

    அதோடு மஞ்சள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து பிறட்டவும்.

    சிறு தீயில் 10 நிமிடங்கள் வேக வைக்கவும். தண்ணீர் ஊற்றக் கூடாது. நன்கு வதங்கியதும் முட்டையை உடைத்து ஊற்றி வதக்கவும். முட்டை தேவைப்பட்டால் மேலும் ஒன்று சேர்க்கலாம்.

    அடிபிடிக்காமல் கிளறிக்கொண்டே இருக்கவும். இறுதியாக் கொத்தமல்லி தழை தூவி இறக்கிவிடவும். அவ்வளவுதான் சுவையான இறால் முட்டை பொடிமாஸ் தயார்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    பார்க்க :

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: