கத்தரிக்காயை சுட்டாலும் சரி, மிளகாய் தூவி பிரட்டினாலும் சரி.. அதன் சுவை என்றுமே தனிதான். அந்த வகையில் கத்தரிக்காயை கொண்டு அருமையான சுவையில் பொடி போட்டு எப்படி செய்வது என்று பார்க்கலாம். இதற்கு நீளமான பச்சைக் கத்தரிக்காய்தான் நன்றாக இருக்கும். சரி...எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பச்சை கத்தரிக்காய் - 1/2 கிலோ
மஞ்சள் பொடி - 1 tsp
தனியா பொடி - 1 tsp
கடுகு - 1/2 tsp
பெருங்காயத்தூள் - 1/4 tsp
சமையல் என்ணெய் - 2 tsp
உப்பு - தே.அ
பொடி அரைக்க :
தனியா - 1 கப்
கடலை பருப்பு - 1 கப்
உளுத்தம் பருப்பு - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 15
எண்ணெய் - 1/2 tsp
கடுகு - 1/2 tsp
செய்முறை :
அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் முதலில் கடுகு சேர்த்து பொறித்துக்கொள்ளுங்கள். பின் அதில் மற்ற பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்து காற்றாட வையுங்கள்.
பின் மிக்ஸியில் போட்டு மைய அரைத்துக்கொள்ளுங்கள். அவ்வளவுதான் பொடி ரெடி. அடுத்ததாக கத்தரிக்காயை நீள வாக்கில் நறுக்கிக்கொள்ளுங்கள்.
கடாய் வைத்து எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள் சேருங்கள். பின் கத்தரிக்காயை சேருங்கள்.
பின் மஞ்சள் பொடி, தனியா பொடி, உப்பு சேர்த்து பிரட்டுங்கள்.
பிரட்டியதும் தட்டுபோட்டு மூடிவிட்டு சிறு தீயில் 10 -15 நிமிடங்கள் வேக வையுங்கள்.
பின் திறந்து பார்க்க கத்தரிக்காய் வெந்திருக்கும். தற்போது அரைத்த பொடியை தூவி நன்கு பிரட்டுங்கள். மசாலா ஒன்றும் பாதியுமாக தேங்காமல் சம அளவில் இருக்குமாறு பிரட்டுங்கள்.
வேலை முடிந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள். அவ்வளவுதான் பொடி போட்ட பச்சை கத்தரிக்காய் தயார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Brinjal, Cooking tips