• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • தேங்காய் இல்லாமல் பொட்டுக்கடலை சட்னி அரைச்சிருக்கீங்களா..? டிரை பண்ணி பாருங்க..செம்ம டேஸ்ட்டா இருக்கும்...

தேங்காய் இல்லாமல் பொட்டுக்கடலை சட்னி அரைச்சிருக்கீங்களா..? டிரை பண்ணி பாருங்க..செம்ம டேஸ்ட்டா இருக்கும்...

பொட்டுக்கடலை சட்னி

பொட்டுக்கடலை சட்னி

ஒரு பொருள் கூடி ஒரு பொருள் குறைந்தாலும் அந்த சட்னி வேஸ்ட்தான். அந்த வகையில் 10 நிமிடத்தில் அதுவும் சுவையான பதத்தில் பொட்டுக்கடலை சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

  • Share this:
காலை உணவுக்கு சட்னி பிரதான உணவு. இது எளிதான வேலை என்றாலும் அதை அரைக்கும் பக்குவத்தில்தான் சுவை இருக்கிறது. ஒரு பொருள் கூடி ஒரு பொருள் குறைந்தாலும் அந்த சட்னி வேஸ்ட்தான். அந்த வகையில் 10 நிமிடத்தில் அதுவும் சுவையான பதத்தில் பொட்டுக்கடலை சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பொட்டுக்கடலை - 1/4 கப்
பெரிய வெங்காயம் - 2
காய்ந்த மிளகாய் - 4
புளி - சிறிதளவு
கல் உப்பு - தே.அ
வெல்லம் - 1 துண்டு
எண்ணெய் - 1 tbsp
கடுகு - 1/2 tsp
உளுந்து - 1/2 tsp
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - 1 கொத்து



செய்முறை :

வெங்காயத்தின் பாதியளவு எடுத்துக்கொள்ளுங்கள். அதை மிக்ஸி ஜாரில் சேருங்கள்.

பின் மிளகாய், உப்பு, வெல்லம், புளி, பொட்டுக்கடலை சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

அடுத்ததாக தாளிக்க கடாய் வைத்து எண்ணெய் ஊற்றுங்கள். காய்ந்ததும் கடுகு, உளுந்து சேருங்கள். பின் சிட்டிகை பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்துக்கொள்ளுங்கள்.

குழந்தைகளுக்கு முருங்கைக்கீரை பருப்பு சாதம் செய்து கொடுங்கள்...விரும்பி சாப்பிடுவாங்க...

அடுத்ததாக மீதி இருக்கும் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக்கொள்ளுங்கள்.

அதில் தற்போது அரைத்து வைத்துள்ள சட்னியை சேர்த்து கிளறுங்கள். சட்னியை ஊற்றும்போது கடாய் அதிக தீயில் இருக்கக் கூடாது. இல்லையெனில் பொட்டுக்கடலை அதிக தீயில் அடி பிடித்துக்கொள்ளும். சுவை
மாறிவிடும்.

அவ்வளவுதான் தேங்காயே இல்லாமல் பொட்டுக்கடலை சட்னி தயார்.

 

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: