மாலை டீ நேரத்தை இனிதாக்கும் உருளைக்கிழங்கு போண்டா : எப்படி செய்வது ?

உருளைக்கிழங்கு போண்டா
- News18 Tamil
- Last Updated: July 23, 2020, 5:40 PM IST
உருளைக்கிழங்கு போண்டா மாலை நேர டீ டைமிற்குப் பொருத்தமான ஸ்னாக்ஸ். அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு - 5 வெங்காயம் - 1பெரியது
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் பொடி - 1/4 tspஉப்பு - தே.அ
இஞ்சி - 1 துண்டு
தாளிக்க
எண்ணெய் - 2 tsp
கடுகு - 1 tsp
பெருங்காயப் பொடி - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - ஒரு ஸ்பிரிங்
கொத்தமல்லி - சிறிதளவு
எலுமிச்சை சாறு - சில துளிகள்
மாவு தயாரிக்க
கடலை மாவு - 3/4 கப்
அரிசி மாவு - 1/4 கப்
மிளகாய் பொடி - 1 tsp
பேங்கிங் சோடா - ஒரு சிட்டிகை
உப்பு - தே.அ
தண்ணீர் - தே.அ
எண்ணெய் - வறுக்க

செய்முறை :
குக்கரில் உருளைக்கிழங்கை வேக வைத்து எடுத்துக்கொள்ளுங்கள். 3 விசில் போதுமானது. வெந்ததும் தோலை நீக்கி கிழங்கை மசித்துக்கொள்ளுங்கள்.
பின் வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை மற்றும் இஞ்சி ஆகியவற்றை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொறிந்ததும் நறுக்கிய பொருட்களை சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள்.
மொச்சைக் கொட்டையில் சாம்பார் செஞ்சு சாப்பிட்டிருக்கீங்களா..? இன்னைக்கே டிரை பண்ணுங்க..!
பின் மஞ்சள் , கொஞ்சம் உப்பு சேர்த்து வதக்குங்கள்.வதங்கியதும் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து பிரட்டுங்கள். மசாலாக்கள் நன்கு கலக்க வேண்டும். இறுதியாக அடுப்பை அணைக்கும் முன் எலுமிச்சை சாறு விட்டு பிரட்டிக்கொள்ளுங்கள்.
இந்த பூரணத்தை தனியாக வைத்துக்கொள்ளுங்கள். மாவு தயாரிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து இட்லி மாவு பதத்தில் கலந்துகொள்ளுங்கள்.
கடாய் வைத்து போண்டா வறுக்க எண்ணெய் ஊற்றிக்கொள்ளுங்கள்.
எண்ணெய் காய்ந்ததும் உருளைக்கிழங்கு பூரணத்தை தேவையான அளவில் உருண்டை பிடித்துக்கொண்டு அதை மாவில் முக்கி எடுத்து எண்ணெய்யில் ஒவ்வொன்றாக போடுங்கள்.
பின் பொன்னிறமாக பொறிந்ததும் எடுத்துவிடுங்கள். தீ மிதமாக இருக்கட்டும் இல்லையெனில் கருகிவிடும்.
தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு - 5