ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கு கிரஞ்சி ஃபிங்கர் : 15 நிமிடத்தில் எளிமையாக செய்திடலாம்..!

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கு கிரஞ்சி ஃபிங்கர் : 15 நிமிடத்தில் எளிமையாக செய்திடலாம்..!

உருளைக்கிழங்கு கிரஞ்சி ஃபிங்கர்

உருளைக்கிழங்கு கிரஞ்சி ஃபிங்கர்

இந்த லாக்டவுன் சமயத்தில் அவர்களை குஷி படுத்த இப்படி விதவிதமாக செய்து கொடுங்கள்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  உருளைக்கிழங்கு கிரஞ்சி ஃபிங்கர் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். அதுவும் இந்த லாக்டவுன் சமயத்தில் அவர்களை குஷி படுத்த இப்படி விதவிதமாக செய்து கொடுங்கள். இதனால் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

  தேவையான பொருட்கள் :

  உருளைக்கிழங்கு - 2

  பிரெட் கிரம்ப்ஸ் - 4 tbsp

  இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 tsp

  சோளமாவு - 2 tbsp

  மிளகாய் தூள் - 1/2 tsp

  இடித்த மிளகாய் 1/4 tsp

  எண்ணெய் - வறுக்க தே.அ

  உப்பு - தே.அ

  செய்முறை :

  உருளைக்கிழங்கை குக்கரில் உப்பு போட்டு 2 விசில் வர வேக வைத்துக்கொள்ளுங்கள்.

  வெந்ததும் அதை நன்கு பிசைந்துகொள்ளுங்கள். அதோடு கொடுக்கப்பட்டுள்ள மற்ற பொருட்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

  டீ, பிஸ்கட்டை வைத்து குச்சி ஐஸ் தயாரித்த பெண் - வைரலாகும் வீடியோ!

  அதை நன்கு பிசைந்துகொள்ளுங்கள். பின் ஃபிங்கர்ஸ் போல் நீள வாக்கில் உருட்டிக்கொள்ளுங்கள். அனைத்தையும் அவ்வாறு உருட்டி வைத்துக்கொள்ளுங்கள்.

  கடாயில் எண்ணெய் ஊற்றி ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக வறுத்து எடுங்கள். அவ்வளவுதான் சுவையான உருளைக்கிழங்கு கிரஞ்சி ஃபிங்கர் தயார்.

  இதற்கு மயோனைஸ், தக்காளி சாஸ் நன்றாக இருக்கும்.

  Published by:Sivaranjani E
  First published:

  Tags: Evening Snacks, Potato recipes