மாலையில் ஏதாவது சாப்பிட வேண்டும் போல் உள்ளதா? இந்த உருளைக்கிழங்கு சீஸ் ரோல் செய்து சாப்பிடுங்கள். சூடாகவும், சுவையாகவும் இருக்கும்.
தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு - 200 கிராம்
கொத்தமல்லி - 10 கிராம்
மிளகு - 2 கிராம்
சீஸ் - 80 கிராம்
உப்பு - தே. அளவு
பிரெட் தூள் - 100 கிராம்
எண்ணெய் - வறுக்க
செய்முறை :
குக்கரில் உருளைக்கிழங்கை வேக வைத்துக்கொள்ளுங்கள்.
வெந்ததும் நன்கு மசித்துக்கொண்டு அதில் துருவிய சீஸ், கொத்தமல்லி, மிளகு, உப்பு என சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளுங்கள்.
மாவை தற்போது நீண்ட உருளைகளாக உருட்டிக்கொள்ளுங்கள்.
சப்பாத்திக்கு பொருத்தமாக இருக்கும் உளுத்தம் பருப்பு கூட்டு... செஞ்சு பாருங்க..!
பின் அவற்றை பிரெட் தூளில் பிரட்டி எடுத்துக்கொள்ளுங்கள். இப்படி ஒவ்வொன்றாக செய்யுங்கள்.
கட்டாயில் எண்ணெய் வீட்டு நன்குக் காய்ந்ததும் ஒவ்வொரு உருளைகளாகப் போட்டு வறுங்கள். பொன்னிறமாக வரும் வரை வறுக்கவும்.
அவ்வளவுதான் உருளைக்கிழங்கு சீஸ் ரோல் தயார். இதற்கு டொமேட்டோ சாஸ் சரியான பொருத்தம்.
வெயில்கால உபாதைகளை தணிக்க தினசரி அருந்தும் டீயில் இந்த 5 பொருட்களை சேருங்கள்..!
பார்க்க :
Published by: Sivaranjani E
First published: April 06, 2020, 14:54 IST
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.