• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • #PotatoBreadRoll | குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கு பிரெட் ரோல் : எப்படி செய்வது..?

#PotatoBreadRoll | குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கு பிரெட் ரோல் : எப்படி செய்வது..?

உருளைக்கிழங்கு பிரெட் ரோல்

உருளைக்கிழங்கு பிரெட் ரோல்

உருளைக்கிழங்கு , கேரட் வகைகளை இப்படி அவர்களுக்கு பிடித்த சுவையில் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

  • Share this:
    மாலை வேளையில் குழந்தைக்கு சூடாக இப்படி பிரெட் ரோல் செய்து கொடுப்பது ஆரோக்கியம் தரும். ஏனெனில் காய்கறிகள் சாப்பிட மறுக்கும் குழந்தைகள், அதில் சேர்க்கப்படும் உருளைக்கிழங்கு , கேரட் வகைகளை இப்படி அவர்களுக்கு பிடித்த சுவையில் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

    தேவையான பொருட்கள்

    உருளைக்கிழங்கு - 2
    கேரட் - 1
    கொத்தமல்லி - 1/4 கப்
    மிளகுத் தூள் - 1/2 tsp
    உப்பு - தே.அ
    எண்ணெய் - பொறிக்க



    செய்முறை :

    உருளைக்கிழங்கை வேக வைத்துக்கொள்ளுங்கள்.

    பின் அதை சீவிக்கொள்ளுங்கள். கேரட்டையும் சீவிக்கொள்ளுங்கள். கொத்தமல்லியும் பொடியாக நறுக்கி போடுங்கள்.

    அதில் மிளகு , உப்பு சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளுங்கள்.

    பின் பிரெட் துண்டின் நான்கு முனைகளையும் வெட்டிவிட்டு சப்பாத்தி கட்டையில் உருட்டிக்கொள்ளுங்கள்.

    நன்கு கனிந்த வாழைப்பழத்தை சாப்பிட பிடிக்கவில்லை எனில் குப்பையில் போடாதீர்கள் : இப்படி அருமையான ஸ்நாக்ஸ் செய்யலாம்

    இதனால் பிரெட் கொஞ்சம் நீளமாகும். அதன் ஒரு முனையின் உருளைக்கிழக்கு கலவையை ஒரு ஸ்பூன் நீள வாக்கில் பரப்பி வைத்து உருட்டுங்கள். பின் நான்கு பக்கமும் தண்ணீர் தொட்டு பிரெட்டை மூடிவிடுங்கள்.

    இப்படி ஒவ்வொன்றாக செய்து வைத்து கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி ஒவ்வொன்றாக வைத்து சிவக்க பொறித்து எடுங்கள்.

    அவ்வளவுதான் உருளைக்கிழங்கு பிரெட் ரோல் தயார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: