உருளைக்கிழங்கு-தக்காளி தொக்கு செஞ்சு பாருங்க.. குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவாங்க...

உருளைக்கிழங்கு-தக்காளி தொக்கு செஞ்சு பாருங்க.. குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவாங்க...
உருளைக்கிழங்கு தக்காளி தொக்கு
  • News18 Tamil
  • Last Updated: September 18, 2020, 8:07 AM IST
  • Share this:
உருளைக்கிழங்கு என்றாலே குழந்தைகளுக்கு பிடித்த உணவுதான். தக்காளி தொக்கும் ஈசியான சமையல். இவை இரண்டும் ஒன்று சேர்ந்தால்...? அப்படியொரு அருமையான சுவையில்தான் இந்த தொக்கு இருக்கப்போகிறது. எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

எண்ணெய் - 4 tbsp


பிரிஞ்சு இலை - 2
பட்டை - 1 துண்டு
ஏலக்காய் - 2சீரகம் - 1 tsp
வெங்காயம் - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 tsp
பச்சை மிளகாய் - 2
தக்காளி - 4
மஞ்சள் - 3/4 tsp
சீரகப் பொடி - 1 tsp
கரம் மசாலா - 1/4 tsp
வெந்தைய இலை - 1 tsp
உருளைக்கிழங்கு - 5
கொத்தமல்லி - சிறிதளவுசெய்முறை :

முதலில் உருளைக்கிழங்கை 4 விசில் விட்டு வேக வைத்துக்கொள்ளுங்கள்.

வானலி வைத்து எண்ணெய் ஊற்றி பிரிஞ்சு இலை, பட்டை, ஏலக்காய், சீரகம் சேர்த்து தாளித்துக்கொள்ளுங்கள்.

பின் வெங்காயம் சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள். அடுத்ததாக இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

தக்காளி சேர்த்து வதக்குங்கள். தக்காளி சுருங்கியதும் மஞ்சள் பொடி, சீரகம் பொடி, கரம் மசாலா , வெந்தைய இலை சேர்த்து வதக்குங்கள்.

மேகி ஆம்லெட் ரெசிபி : காலை உணவிற்கு ஈசியாக செய்து சாப்பிடலாம்

உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள். அடுத்ததாக 1/2 கப் தண்ணீர் ஊற்றி 2 நிமிடங்களுக்கு கொதிக்க வையுங்கள்.

கொதித்ததும் வேக வைத்த உருளைக்கிழங்குகளை கைகளிலேயே துண்டுகளாக மசித்து போடுங்கள்.

பின் தட்டு போட்டு மூடி 7 - 8 நிமிடங்கள் கொதிக்கட்டும். இறுதியாக கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள்.

அவ்வளவுதான் உருளைக்கிழங்கு தக்காளி தொக்கு தயார்...
First published: September 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading