சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ருசிக்க ’அவல் கட்லெட்’ - செய்முறை இதோ...!

சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடும் வகையிலான ஸ்நாக்ஸ்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ருசிக்க ’அவல் கட்லெட்’ - செய்முறை இதோ...!
அவல் கட்லெட்
  • Share this:
சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடும் வகையிலான ஸ்நாக்ஸ் என்பதால் மாலை நேரத்தில் சூடாக செய்து கொடுங்கள் அவல் கட்லெட்.

தேவையான பொருட்கள் :

அவல் - 1 கப்


உருளைக்கிழங்கு - 1/2 கப்
கேரட் - 1 சிறியது
பச்சை மிளகாய் - 1இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 tsp
கொத்தமல்லி - சிறிதளவு
தயிர் - 2 tsp
உப்பு - தே.அ
மஞ்சள் - 1/4 tsp
மிளகாய் தூள் - 1/4 tsp
கரம் மசாலா - 1/4 tsp
எண்ணெய் - வறுக்கசெய்முறை :

அவலை தண்ணீரில் அலசி தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.  உருளைக்கிழங்கை வேக வைத்துக்கொள்ளுங்கள். கேரட்டை சீவிக்கொள்ளுங்கள்.

நீங்கள் அரைக்கும் காரச்சட்னியை சுவையாக மாற்ற இப்படி செய்து பாருங்கள்

தற்போது அவலை ஒரு கிண்ணத்தில் போட்டு அதில் உருளைக்கிழங்கு, கேரட், இஞ்சி பூண்டு பேஸ்ட் என கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள்.

மசாலாக்கள் நன்கு கலக்குமாறு பிசையுங்கள். உப்பு சுவை பார்த்துக்கொள்ளுங்கள்.அவ்வளவுதான் அவற்றை தட்டையாக கட்லெட் போல் தட்டிக்கொள்ளுங்கள். தவா வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி தவாவில் தடவுங்கள்.

பின் தட்டிய மாவுகளை வைத்து அதன் மேல் எண்ணெய் ஊற்றி இரு புறமும் திருப்பிப் போட்டு வாட்டி எடுங்கள்.

அவ்வளவுதான் மொறு மொறு சுவையில் அவல் கட்லெட் தயார். இதற்கு டொமேட்டோ சாஸ் பொருத்தமாக இருக்கும்.
First published: July 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading