பீட்ஸா சாப்பிட நாவூறுகிறதா..? ஈசியாக மைக்ரோவேவ் ஓவன் இல்லாமலேயே செய்ய இதோ வழிகள்..!

ஒரு குடும்பத்திற்கே ஆர்டர் செய்ய வேண்டும் என்றால் செலவு கொஞ்சம் அதிகமாகலாம். வீட்டிலேயே செய்தால் நிறைவாக செய்யலாம்.

பீட்ஸா சாப்பிட நாவூறுகிறதா..? ஈசியாக மைக்ரோவேவ் ஓவன் இல்லாமலேயே செய்ய இதோ வழிகள்..!
பீட்ஸா
  • Share this:
பீட்ஸா என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குஷியாகிவிடுவார்கள். இதை ஒரு குடும்பத்திற்கே ஆர்டர் செய்ய வேண்டும் என்றால் செலவு கொஞ்சம் அதிகமாகலாம். வீட்டிலேயே செய்தால் நிறைவாக செய்யலாம். அதுவும் மைக்ரோவேவ் ஓவன் இல்லாமல் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

மைதா - 1 கப்


பேக்கிங் சோடா - 1/4 tsp
உப்பு - 1 tsp
தயிர் - 1/3 கப்எண்ணெய் - 2 tsp

டாப்பிங் சாஸ் செய்ய :

தக்காளி - 2
வெங்காயம் - 3
காய்ந்த மிளகாய் - 5

டாப்பிங் செய்ய :

குடைமிளகாய் - சிவப்பு, பச்சை, மஞ்சள்
சீஸ் - விருப்பத்திற்கு ஏற்ப
சோளம் - தே. அளவு
பனீர் - தே. அளவுசெய்முறை

மாவு பிசைய பாத்திரத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து பிசையவும். ஒரு மணி நேரம் ஊற வைக்கலாம்.

இதற்கிடையே டாப்பிங் சாஸ் செய்ய மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை கடாயில் எண்ணெய் ஊற்றி வதக்கி பின் அதை மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

மாவு ஊறியதும் சப்பாத்தி உருட்டுவதுபோல் சற்று தடியாக உருட்டிக்கொள்ளுங்கள்.

பின் நான் ஸ்டிக் பேனில் எண்ணெய் தடவி அதில் மாவை பேன் முழுவதும் கைகளால் தடவி நிரப்புங்கள்.

அடுத்ததாக அதன் மேல் டாப்பிங் சாஸை நிரப்புங்கள்.

பின் டாப்பிங் செய்ய கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை விருப்பம் போல் அடுக்கலாம்.

தற்போது பேன்னை காற்று புகாதவாறு மூடிவிடுங்கள். அடுப்பை எறியவிட்டு சிறு தீயில் 15 நிமிடங்கள் வேக விடுங்கள்.

15 நிமிடங்கள் கழித்து பார்த்தால் நன்கு வெந்திருக்கும். அதை அப்படியே லாவகமாக எடுத்து வெட்டி சுவைக்கலாம்.

பீட்ஸா தயார்..!

பார்க்க :

 

 
First published: April 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading