இதய நோய், எலும்பு உறுதிக்கு உதவும் பிரண்டை துவையல் - 10 நிமிட செய்முறை இதோ...

கால்சியம் சத்து நிறைந்தது என்பதால் பற்களுக்கும் நல்லது. நார்ச்சத்து கொண்டதால் செரிமானத்தைத் தூண்டக் கூடியது.

இதய நோய், எலும்பு உறுதிக்கு உதவும் பிரண்டை துவையல் - 10 நிமிட செய்முறை இதோ...
பிரண்டை துவையல்
  • News18 Tamil
  • Last Updated: September 11, 2020, 12:20 PM IST
  • Share this:
பிரண்டை இதயத்திற்கும், எலும்பை பலப்படுத்தவும் மருத்துவ குணம் நிறைந்தது. அதுதவிர கால்சியம் சத்து நிறைந்தது என்பதால் பற்களுக்கும் நல்லது. நார்ச்சத்து கொண்டதால் செரிமானத்தைத் தூண்டக் கூடியது. உடல் கொழுப்பைக் கரைக்க உதவும். இதில் துவையல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பிரண்டை - 3/4 கப்


நல்லெண்ணெய் - 2 tbsp
உளுத்தம் பருப்பு - 3 tbsp
காய்ந்த மிளகாய் - தே.அஇஞ்சி - 1/2 துண்டு
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
தேங்காய் துருவியது - 3 tbsp
உப்பு - தே.அ



செய்முறை :

முதலில் பிரண்டையைக் கழுவி அதன் தோலை சீவிக்கொள்ளுங்கள். பிரண்டை கையில் பட்டால் அரிக்கும். எனவே கவனமுடன் செய்யுங்கள். தோலை உரித்து சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள்.

தயிர் இருந்தால் போதும்... இட்லி, தோசைக்கு நொடியில் அசத்தல் சட்னி தயார் - ரெசிபி இதோ...!

தேவையான மற்ற பொருட்களையும் தயார் செய்துகொண்டு கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பைப் போட்டு வதக்குங்கள்.

பொன்னிறமாக வந்ததும் காய்ந்த மிளகாய், இஞ்சி என ஒவ்வொரு பொருளாக சேர்த்து வதக்குங்கள். அவற்றை தனியாக தட்டில் வைத்து ஆற வையுங்கள். பின் பிரண்டையை வதக்கிக்கொள்ளுங்கள். சற்று சுருங்கும் அளவு வதக்குங்கள்.

பின் அதையும் ஆற வைத்து மிக்ஸியில் மொத்தமாக சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள். அதிலேயே உப்பும் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.

அவ்வளவுதான் பிரண்டை துவையல் தயார்.
First published: July 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading