தற்போதைய இளசுகளின் தலையாய பிரச்சனைகளில் ஒன்று அதீத உடல் எடை. உடல் எடையை குறைப்பது ஒன்றும் எளிமையான விஷயம் அல்ல. அதற்காக, நாம் முயற்சிக்காத வலிகள் இல்லை. என்ன செய்தாலும், நமக்கு சரியான முடிவுகள் கிடைப்பதில்லை. இந்நிலையில், உடல் எடையை சுலபமாக குறைக்க வைட்டமின் சி அதிகம் கொண்ட அன்னாசி பழத்தை பயன்படுத்தி ஒரு சூப்பரான டீயை வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த பதிவில் நாம் காணலாம்.
அன்னாசி பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. அதில், ப்ரோமெலைன், ப்ரோடீன், நார்ச்சத்து, வைட்டமின் எ, வைட்டமின் சி, பீட்டா- கரோட்டின், தையாமின், வைட்டமின் பி-5, பொட்டாசியம், கால்சியம், காப்பர், மெக்னீசியம் மற்றும் மாங்கனீஸ் சத்துக்கள் அடங்கும். அன்னாசி பழம் பித்தத்தால் வரக்கூடிய வாந்தி, கிறுகிறுப்பு, பசி, மந்தம் விலகவும் நல்ல மருந்தாக செயல்படும்.
இந்த பழத்தில் புரதச்சத்து தாராளமாக இருப்பதால் செரிமானக் கோளாறு, உடலில் ஏற்படும் வீக்கம் போன்றவற்றைக் குணமாகும். குறிப்பாக இளம் பெண்கள் உள்பட அனைவரின் தொப்பையைக் கரைக்கும் சக்தி படைத்தது அன்னாசி. வாருங்கள் நாம் உடல் எடையை குறைக்க உதவும் அன்னாசி டீ செய்வது எப்படி என இங்கே பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
அன்னாசி பழம் - 1.
இஞ்சி - 2 இன்ச் அளவு.
கிராம்பு - 1 ஸ்பூன்.
மஞ்சள் - 1/2 ஸ்பூன்.
எலுமிச்சை பழம் - 1.
தண்ணீர் - 1 லிட்டர்.
செய்முறை :
அன்னாசி டீ செய்ய எடுத்துக்கொண்ட அன்னாசி பழத்தினை நன்கு சுத்தம் செய்து, அதன் தோலை மட்டும் சீவி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அதே போல எடுத்துக்கொண்ட எலுமிச்சை பழத்தினை இரண்டாக வெட்டி அதன் சாறை பிழிந்து தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும். அதேநேரம் இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
தற்போது கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து சூடேற்றவும். தொடர்ந்து இதில் அன்னாசி தோல், நறுக்கிய இஞ்சி, கிராம்பு தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 3 நிமிடங்களுக்கு வதக்கவும்.
தொடர்ந்து இதில் ஒரு லிட்டர் அளவிற்கு தண்ணீர் சேர்த்து சுமார் 10-15 நிமிடங்களுக்கு நன்கு கொதிக்க வைக்கவும்.
Also Read | புளிப்பு சுவையில் மாங்காய் சர்பத் : நாவூற வைக்கும் ரெசிபி..!
இந்த சேர்மத்தை நன்கு கொதிக்க வைத்த பின்னர், காய்ச்சிய தண்ணீரை மட்டும் வடிக்கட்டி ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக்கொள்ளவும்.
தற்போது இதில் 2 ஸ்பூன அளவிற்கு எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கினால், உடல் எடை குறைப்புக்கு உதவும் அன்னாசி டீ ரெடி!.
முறையாக தயார் செய்த இந்த அன்னாசி டீ-யினை ஒரு கோப்பையில் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் அழகுக்கு இதன் மீது இரண்டு புதினா தழைகளை வைத்து கவர்ச்சியாக பரிமாறலாம். தேவைப்பட்டால், 1 ஸ்பூன் தேன் சேர்த்துக்கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Food recipes, Health Benefits, Pineapple