• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • பிரெட் , சப்பாத்தி என எதுக்கும் தடவி சாப்பிடலாம் பைனாப்பிள் ஜாம் : ஃபுட் கலரிங், கெமிக்கல் இல்லாமல் வீட்டிலேயே செய்து கொடுங்கள்...

பிரெட் , சப்பாத்தி என எதுக்கும் தடவி சாப்பிடலாம் பைனாப்பிள் ஜாம் : ஃபுட் கலரிங், கெமிக்கல் இல்லாமல் வீட்டிலேயே செய்து கொடுங்கள்...

பைனாப்பிள் ஜாம்

பைனாப்பிள் ஜாம்

கடையில் வாங்கி கொடுப்பதை விட உங்கள் கைப்பட வீட்டிலேயே செய்து கொடுத்தால் அதில் தனி திருப்தி கிடைக்கும். அதோடு அதில் பாதிப்பை உண்டாக்கும் எந்த உணவுக் கலப்படமும் இருக்காது.

  • Share this:
ஜாம் என்றாலே குழந்தைகளுக்கு குஷிதான். ஆனால் அதை கடையில் வாங்கி கொடுப்பதை விட உங்கள் கைப்பட வீட்டிலேயே செய்து கொடுத்தால் அதில் தனி திருப்தி கிடைக்கும். அதோடு அதில் பாதிப்பை உண்டாக்கும் எந்த உணவுக் கலப்படமும் இருக்காது. எனவே நீங்கள் செய்து கொடுத்து குழந்தை சாப்பிட்டால் ஒரு மன மகிழ்ச்சியும் இருக்கும். வீட்டிலேயே பைனாபிள் ஃபிளேவரில் ஜாம் செய்ய டிப்ஸ் இதோ...

தேவையான பொருட்கள் :

அன்னாசி பழம் - 1
சர்க்கரை - 1 கப்
எலுமிச்சை - 1/2 பாதி



செய்முறை :

அன்னாசியை தோல் நீக்கி சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள்.

பின் மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ளுங்கள்.

அதை இப்போது ஒரு பாத்திரத்தில் வைத்து சூடேற்றி கிளறுங்கள். தண்ணீர் இறுகி கெட்டிப்பதம் வரும்போது சர்க்கரை சேர்த்து கிளறுங்கள்.

இட்லி பொடி கடையில் வாங்குகிறீர்களா..? ஒரு முறை வீட்டில் இப்படி அரைத்துப் பாருங்கள்...

நன்கு கெட்டியானதும் அடுப்பை அணைத்துவிட்டு எலுமிச்சை சாறு ஊற்றி கலந்துவிடுங்கள்.

பின் அப்படியே ஆற விடுங்கள். பிறகு ஒரு பாட்டிலில் கொட்டி மூடி ஃபிரிட்ஜில் வைத்துவிடுங்கள். அவ்வளவுதான் எளிமையான முறையில் பைனாபிள் ஜாம் தயார்.

 

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: