கொரோனா சமயத்தில் மிளகு ரசம் சாப்பிடுவது நல்லதா..? தேவையான ரெசிபி இதோ...

மிளகு ரசம்

இதை காய்ச்சல் சமயத்தில்தான் சாப்பிட வேண்டும் என்றில்லை. தினசரி உணவில் ரசமும் சேர்த்துக்கொள்வது நல்லது. இது நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது என்று கூறப்படுகிறது.

 • Share this:
  மிளகு, பூண்டு, சீரகம் என இடித்து வைக்கப்படும் மிளகு ரசம் தொண்டைக்கு இதமாக இருக்கும். இது சளி, இருமலுக்கு உதவும் என்பதால் காய்ச்சல் சமயத்தில் மிளகு ரசம்தான் வைத்துக்கொடுப்பார்கள். இதை காய்ச்சல் சமயத்தில்தான் சாப்பிட வேண்டும் என்றில்லை. தினசரி உணவில் ரசமும் சேர்த்துக்கொள்வது நல்லது. இது நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது என்று கூறப்படுகிறது. எனவே அருமையான மிளகு ரசம் எப்படி வைப்பது என்று பார்க்கலாம்.

  தேவையான பொருட்கள் :

  புளி - நெல்லிக்காய் அளவு
  கருவேப்பிலை - 1 கொத்து
  கொத்தமல்லி - தே.அ

  அரைக்க :

  பழுத்த தக்காளி - 1
  மஞ்சள் - 1/2 tsp
  பெருங்காயத்தூள் - 1/8 tsp
  மிளகு - 2 1/2 tsp
  சீரகம் - 1 tsp
  வெந்தயம் - 1/2 tsp
  பூண்டு - 3 பற்கள்
  உப்பு - 1 tsp

  தாளிக்க :

  எண்ணெய் - 2 tsp
  கடுகு - 1 tsp
  சீரகம் - 1/2 tsp
  காய்ந்த மிளகாய் - 2  செய்முறை :

  முதலில் புளியை அரை மணி நேரத்திற்கு முன்பே ஊற வைத்துவிடுங்கள்.

  பின் அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு மைய அரையுங்கள். முதலில் மிளகு , சீரகம் சேர்த்து மைய அரைத்தபின் மற்ற பொருட்களை சேர்க்கவும்.

  அடுத்ததாக ஊற வைத்த புளியை நன்கு கரைத்து அதன் தண்ணீரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் அரைத்த விழுதை சேர்க்கவும்.

  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் காய்கறி சூப் செய்வது எப்படி..?

  அடுத்ததாக கருவேப்பிலை கொத்தமல்லி சேர்க்கவும். அதன் பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்த்து கொஞ்சம் வாயில் வைத்து புளி, உப்பு அளவு தெரிந்த பின் அதற்கு ஏற்ப தண்ணீர் சேர்த்துக்கொள்ளுங்கள்.

  ரசக் கலவை தயாரானதும் தாளிக்க கடாய் வைத்து கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளித்துக்கொள்ளுங்கள்.

  தாளித்ததும் இந்த ரசக்கலவையை அதில் ஊற்றவும். பின் ரசம் நுரை பொங்கி வரும் வேளையில் அடுப்பை அணைத்துவிடுங்கள்.

  அவ்வளவுதான் அருமையான மிளகு ரசம் தயார்.

   

   

   

   
  Published by:Sivaranjani E
  First published: