சப்பாத்தி, தோசைக்கு பொருத்தமான உருளைக் கிழங்கு பட்டாணி குருமா..! எப்படி செய்வது..?

தேங்காய் பாலின் சுவையில் குருமா செய்து சாப்பிட்டால் அருசுவையில் நாவில் நிற்கும்.

சப்பாத்தி, தோசைக்கு பொருத்தமான உருளைக் கிழங்கு பட்டாணி குருமா..! எப்படி செய்வது..?
உருளைக் கிழங்கு பட்டாணி குருமா
  • Share this:
தேங்காய் பாலின் சுவையில் குருமா செய்து சாப்பிட்டால் அருசுவையும் நாவில் நிற்கும். அதில் உருளைக்கிழங்கும் பட்டாணியும் சேர்த்து சமைத்தால் சுவை, உச்சம் தொடும். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

தேங்காய் துருவல் - 2 கப்


சுடு தண்ணீர் - 1 கப்

குழம்பு செய்ய :

உருளைக்கிழங்கு - 3பச்சை பட்டாணி - 1 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 4 பற்கள்
கிராம்பு - 2
சீரகப்பொடி - 1 tsp
தனியா பொடி - 1 tsp
மிளகு - 1/2 tsp
மஞ்சள் பொடி - 1/2 tsp
கரம் மசாலா - 1 tsp
உப்பு - தே.அ

படிக்க: ஐந்தே நிமிடத்தில் மாங்காய் ஊறுகாய்.. நாவூறும் சுவையில் எப்படி செய்வது?செய்முறை :

முதலில் தேங்காய் பால் அரைத்து, அதை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

குக்கர் வைத்து எண்ணெய் ஊற்றுங்கள். காய்ந்ததும் வெங்காயம் , இஞ்சி பூண்டு சேர்த்து வதக்குங்கள். பின் தக்காளி சேருங்கள்.

வதங்கியதும் கிராம்பு , சீரகப் பொடி, மிளகு , மஞ்சள் பொடி, கரம் மசாலா சேர்த்து வதக்குங்கள்.

அடுத்ததாக உருளைக்கிழங்கு மற்றும் பட்டாணி சேர்த்து கிளறுங்கள். பின் எடுத்து வைத்துள்ள தேங்காய் பால் 1  1/2 கப் சேருங்கள்.

படிக்க: நீங்கள் அருந்தும் பாலில் தினம் 2 ஏலக்காய் தட்டிப் போடுங்கள் : ஏன் தெரியுமா..?

பின் குக்கரை மூடி 3 விசில் வர காத்திருங்கள். விசில் வந்ததும் அடுப்பை அணைத்து பிரஷர் அடங்கியதும் குக்கரை திறந்து, பின் கிளறி உப்பு பார்த்துக்கொள்ளுங்கள். மீண்டும் அடுப்பில் வைத்து 2 கொதி வர வையுங்கள். கொதித்து தேவையான கெட்டிப்பதம் வந்ததும் இறக்கி விடுங்கள்.

அவ்வளவுதான் சுவையான் உருளைக்கிழங்கு பட்டாணி குருமா தயார்.
First published: July 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading