• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • வேர்க்கடலையும் தக்காளியும் வைத்து வித்தியாசமான முறையில் சட்னி அரைச்சிருக்கீங்களா..? இன்னைகே டிரை பண்ணுங்க...

வேர்க்கடலையும் தக்காளியும் வைத்து வித்தியாசமான முறையில் சட்னி அரைச்சிருக்கீங்களா..? இன்னைகே டிரை பண்ணுங்க...

வேர்க்கடலை தக்காளி சட்னி

வேர்க்கடலை தக்காளி சட்னி

  • Share this:
எப்போதும் தேங்காய் சட்னி, காரசட்னி என அரைத்து நா சுவையும் அளுத்து போய் விட்டதா..? வித்தியாசமான சுவையில் வேர்க்கடலை தக்காளி சட்னி டிரை பண்ணி பாருங்க.

தேவையான பொருட்கள் :

வேர்க்கடலை - 1/4 கப்
உடைத்த கடலை - 2 tbsp
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 5
வர மிளகாய் - 2
புளி - சின்ன நெல்லிக்காய் அளவு
பூண்டு - 2 பல்
கடுகு - 1/4 tsp
கருவேப்பிலை - 1 கொத்து
சமையல் எண்ணெய் - tsp



செய்முறை :

முதலில் வேர்க்கடலையை வறுத்து தோலை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

பின் தக்காளி, காய்ந்த மிளகாய், புளி, பூண்டு கருவேப்பிலை சேர்த்து வதக்கி ஆற வைத்துக்கொள்ளுங்கள்.

பின் மிக்ஸியில் வதக்கிய பொருட்களுடன் வேர்க்கடலை, பச்சை மிளகாய், உடைத்த கடலை , உப்பு சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

பனீரில் இட்லி செய்யலாமா ? ட்ரை பண்ணி பாருங்க அட்டகாசமாக இருக்கும்..

பின் அதை கிண்ணத்தில் வழித்து எடுத்துக்கொண்டு மீண்டும் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டுங்கள்.

அவ்வளவுதான் சட்னி தயார்.

 

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: