வீட்டில் வேர்க்கடலை இருக்கா..? உடலுக்கு ஆரோக்கியம் ’பீனட் மில்க் ஷேக்’ செய்து குடியுங்கள்..!

வேர்க்கடலை உடலுக்கு ஆரோக்கியம் தரக் கூடியது. அதை இப்படி ஜூஸ் போல் அரைத்துக் குடிப்பதிலும் தனி சுவை உண்டு. எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

வீட்டில் வேர்க்கடலை இருக்கா..? உடலுக்கு ஆரோக்கியம் ’பீனட் மில்க் ஷேக்’ செய்து குடியுங்கள்..!
பீனட் மில்க் ஷேக்
  • Share this:
தேவையான பொருட்கள்

வேர்க்கடலை - 1/2 கப்
பால் - 1 கிளாஸ்


வெண்ணிலா ஐஸ் கிரீம் - 1 ஸ்கூப்
சர்க்கரை - தே . அளவு
கண்டன்ஸ் மில்க் - 2 ஸ்பூன் ( தேவைப்பட்டால்)

செய்முறை :

இரவு தூங்கும் முன் வேர்க்கடலையை ஊற வைத்துக்கொள்ளுங்கள்.

பாலை காய்ச்சி சூடு ஆறியதும் ஃபிரிட்ஜில் வைத்துவிடுங்கள்.

மறுநாள் காலை வேர்கடலையை வடித்து அதை மிக்ஸியில் போட்டு மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

தினமும் இஞ்சியுடன் நாளைத் துவங்கினால் உடலில் இந்த அதிசயங்கள் நடக்கும்..!

அடுத்ததாக பால் மற்றும் ஐஸ் கிரீம், சர்க்கரை மற்றும் கண்டன்ஸ் மில்க் சேர்த்து மீண்டும் ஒரு ஓட்டு ஓட்டுங்கள்.

அவ்வளவுதான் அதை அப்படியே கிளாஸில் ஊற்றி மேலே பாதாம் மற்றும் காய்ந்த திராட்சை தூவி குடிக்கலாம்.லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

பார்க்க :
First published: May 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading