• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • ஃபிட்னஸ் பிரியர்கள் தினமும் காலை குடிக்க பீனட் ஷேக் : 10 நிமிடத்தில் செய்ய ரெசிபி...

ஃபிட்னஸ் பிரியர்கள் தினமும் காலை குடிக்க பீனட் ஷேக் : 10 நிமிடத்தில் செய்ய ரெசிபி...

பீனட் ஷேக்

பீனட் ஷேக்

இதை குடிப்பதால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் ஆற்றல் நிறைவாகவும் வைத்துக்கொள்ள உதவும்.

  • Share this:
வேர்க்கடலையில் இரும்புச் சத்து உள்ளிட்ட பல நன்மைகள் உள்ளன. காலையில் இதை குடிப்பதால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் ஆற்றல் நிறைவாகவும் வைத்துக்கொள்ள உதவும். அதோடு நீண்ட நேரம் பசியும் எடுக்காது.

தேவையான பொருட்கள்

வேர்க்கடலை - 1/2 கப்
பால் - 1 கிளாஸ்
வெண்ணிலா ஐஸ் கிரீம் - 1 ஸ்கூப்
சர்க்கரை - தே . அளவு
கண்டன்ஸ் மில்க் - 2 ஸ்பூன் ( தேவைப்பட்டால்)



செய்முறை :

இரவு தூங்கும் முன் வேர்க்கடலையை ஊற வைத்துக்கொள்ளுங்கள்.

பாலை காய்ச்சி சூடு ஆறியதும் ஃபிரிட்ஜில் வைத்துவிடுங்கள்.

மறுநாள் காலை வேர்கடலையை வடித்து அதை மிக்ஸியில் போட்டு மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

Weight Loss Drinks : உடல் எடையை எளிதில் குறைக்க உதவும் ஆரோக்கிய பானங்கள்.. ட்ரை பண்ணி பாருங்க..

அடுத்ததாக பால் மற்றும் ஐஸ் கிரீம், சர்க்கரை மற்றும் கண்டன்ஸ் மில்க் சேர்த்து மீண்டும் ஒரு ஓட்டு ஓட்டுங்கள்.

அவ்வளவுதான் அதை அப்படியே கிளாஸில் ஊற்றி மேலே பாதாம் மற்றும் காய்ந்த திராட்சை தூவி குடிக்கலாம்.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: