பாகற்காய் குழம்பு எப்படி சமைத்தாலும் கசக்குதா? இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க, தட்டில் ஒரு பருக்கை கூட மிஞ்சாது..

சிறுநீரகப் பை, கல்லீரலை சுத்தம் செய்து ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும். குடல் ஆரோக்கியத்திற்கும் பாகற்காய் நல்லது.

பாகற்காய் குழம்பு எப்படி சமைத்தாலும் கசக்குதா? இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க, தட்டில் ஒரு பருக்கை கூட மிஞ்சாது..
பாகற்காய் புளிக்குழம்பு
  • Share this:
பாகற்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. இது இரத்தத்தில் சர்க்கரை அளவை சமன் செய்து குளுக்கோஸ் அளவி சீராக வைத்துக்கொள்ள உதவும். அதுமட்டுமன்றி, சிறுநீரகப்பை, கல்லீரலை சுத்தம் செய்து ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும். குடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. எனவே இதில் எப்படி குழம்பு செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

நல்லெண்ணெய் - 4 tbsp


பாகற்காய் - 300 கிராம்
கடுகு - 1/2 tsp
வெந்தையம் - 1/2 tspஉளுத்தம் பருப்பு - 1/2 tsp
சீரகம் - 1/2 tsp
மிளகு - 1/4 tsp
பூண்டு - 4
வெங்காயம் - 1
கறிவேப்பிலை - 1 கொத்து
தக்காளி - 2
தனியா பொடி - 1 tsp
மிளகாய் தூள் - 1 tsp
மஞ்சள் பொடி - 1/4 tsp
குழம்பு மிளகாய் தூள் - 2 tbsp
புளி - எலுமிச்சை அளவு
உப்பு - தே.அ
கொத்தமல்லி - சிறிதளவுசெய்முறை :

வானலியில் எண்ணெய் விட்டு வட்டமாக நறுக்கிய பாகற்காய்களை போட்டு சிவக்க வதக்கி எடுத்துக்கொள்ளுங்கள்.

பின் அதே எண்ணெயில் கடுகு , வெந்தையம், சீரகம், மிளகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்துக்கொள்ளுங்கள்.

பின் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்குங்கள்.

தக்காளியில் எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். பின் அனைத்து பொடிகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

அடுத்ததாக புளிக்கரைசல் தண்ணீர் சேர்த்துக்கொள்ளுங்கள். உப்பு சேர்த்து சுவை பார்த்துக்கொள்ளுங்கள்.

சப்பாத்தி தோசைக்கு பொருத்தமான முட்டை ஆம்லெட் கிரேவி.. இரவு உணவை எளிதாக்குங்கள்.. ரெசிப்பி இதோ..

சரியாக இருப்பின் தட்டு போட்டு மூடி 2 நிமிடங்களுக்கு கொதிக்க வையுங்கள். நன்கு கொதித்து பச்சை வாசனை போனதும் பாகற்காய்களை சேர்த்து கிளறுங்கள்.

பின் மீண்டும் தட்டுபோட்டு மூடி தண்ணீர் கொஞ்சம் கொரேவி பதம் வரும் வரை கொதிக்க விடுங்கள்.

தேவையான குழம்பு பதம் வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு கொத்தமல்லி தழை தூவுங்கள்.

அவ்வளவுதான் பாகற்காய் புளிக்குழம்பு தயார்.

 

 
First published: September 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading