ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

பட்டாணி சேர்த்து போண்டா சுட்டு பாருங்கள்.. இதைவிட சிறந்த டீ டைம் ஸ்நாக்ஸ் கிடைக்காது..!

பட்டாணி சேர்த்து போண்டா சுட்டு பாருங்கள்.. இதைவிட சிறந்த டீ டைம் ஸ்நாக்ஸ் கிடைக்காது..!

 பட்டாணி போண்டா

பட்டாணி போண்டா

வீட்டில் அனைவரும் இருக்கும்போது அசத்த இப்படி இன்ஸ்டன்டாக போண்டா ரெசிபி செய்து பாருங்கள். டீ கடை போண்டாவே தோற்றுப்போகும்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பலருக்கும் மாலையில் டீ குடிக்கும்போது காரசாரமாக ஏதாவது கொறித்தால்தான் டீ டைம் முழுமை அடையும். அதனால்தான் டீ கடைகளில் மாலையில் பஜ்ஜி , போண்டா போடுவது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. அந்த வகையில் நீங்களும் வீட்டில் அனைவரும் இருக்கும்போது அசத்த இப்படி இன்ஸ்டன்டாக போண்டா ரெசிபி செய்து பாருங்கள். டீ கடை போண்டாவே தோற்றுப்போகும். உங்களுக்கான ரெசிபி இதோ...

தேவையான பொருட்கள் :

பச்சை பட்டாணி - 1/2 கப்

பச்சை மிளகாய் - 2

பூண்டு - 5 பற்கள்

இஞ்சி - அரை துண்டு

சோம்பு - 1/4 tsp

கோதுமை மாவு - 1 கப்

அரிசி - 1/4 கப்

ஆப்ப சோடா - 1 சிட்டிகை

உப்பு - தே.அ

கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை :

பச்சைப்பட்டாணி , பச்சை மிளகாய் , இஞ்சி , பூண்டு மற்றும் சோம்பு ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் கொரொகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள்.

பின் விழுதை ஒரு பாத்திரத்தில் வழித்துக்கொள்ளுங்கள்.

அதில் கோதுமை மாவு, அரிசி மாவு, சோடா , உப்பு மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். (இதில் அரிசி மாவுக்கு பதில் ரவையும் சேர்த்துக்கொள்ளலாம்)

தண்ணீர் தேவைப்பட்டால் தெளித்து பிசைந்துகொள்ளுங்கள்.

பின் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுத்து உருண்டைகளாக எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுங்கள்.

அவ்வளவுதான் பட்டாணி போண்டா நொடியில் ரெடி.

First published:

Tags: Evening Snacks