பாஸ்தா சமோசா டிரை பண்ணிருக்கீங்களா..? செம்ம டேஸ்ட்..இன்னைக்கே செய்து பாருங்க..!

பாஸ்தா சமோசா

இது உங்களுக்கு புது சுவை அனுபவமாக இருக்கும். மாலையை இனிதாக்கும்.

 • Share this:
  பாஸ்தா பலருடைய ரீசண்ட் டே அடிக்ட் எனலாம். பலரும் இந்த லாக்டவுனில் மிஸ் செய்யும் உணவுகளில் இந்த பாஸ்தாவும் இடம் பிடித்திருக்கும். இதை செய்வதும் அத்தனை கடினம் கிடையாது. ஆனால் ரெஸ்டாரண்ட் சுவையை பெறுவது கொஞ்சம் கடினம்தான்.

  இருப்பினும் நம்முடைய சொந்த ஸ்டைலில் டிரை பண்ணி சாப்பிடுவோம். அந்தவகையில் பாஸ்தாவை இப்படி சமோசாவில் ஸ்டஃபாக வைத்து எப்படி சமைப்பது என்று பார்க்கலாம். இது உங்களுக்கு புது சுவை அனுபவமாக இருக்கும். மாலையை இனிதாக்கும். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

  தேவையான பொருட்கள் :

  சமோசா மாவு

  மைதா - 2 கப்
  எண்ணெய் - தே.அ
  தண்ணீர் - தே.அ

  பாஸ்தா மசாலா

  பாஸ்தா - 1 கப்
  வெங்காயம் - 1/4 கப்
  வெங்காயம் - 4 பற்கள்
  குடைமிளகாய் - 1/4 கப்
  கேரட் - 1/4 கப்
  தக்காளி சாறு - 1/2 கப்
  மொசரல்லா சீஸ் - 1/2 கப்
  மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
  உப்பு - தே.அ  செய்முறை

  முதலில் மைதா, உப்பு, தண்ணீர் சேர்த்து சமோசாவிற்கு மாவு பிசைந்துக்கொள்ளுங்கள்.

  அடுத்ததாக பாஸ்தா மசாலா செய்ய முதலில் பாஸ்தாவை வேக வைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

  பின் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயம், நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்குங்கள். பின் தக்காளி சாறு ஊற்றி வதக்குங்கள்.

  வதங்கியதும் காய்கறிகளை சேர்த்து வதக்குங்கள். உப்பு, மிள்காய் தூள் சேர்த்துக்கொள்ளுங்கள்.

  பின் காய்கறிகள் வேக மிதமான தீயில் தட்டுப்போட்டு மூடிவிடுங்கள். ஆவியில் வெந்துவிடும்.

  மாலையில் டீ டைமில் கொறிக்க பிரெட் பசலைக் கீரை போண்டா : ஹெல்தியான இந்த ஸ்னாக்சின் ரெசிபி இதோ...

  காய்கறிகள் வெந்ததும் பாஸ்தாவை சேர்த்து கிளறுங்கள். இறுதியாக சீஸ் சேர்த்து கலந்துவிட்டு பிரட்டுங்கள். அவ்வளவுதான் மசாலா ரெடி

  தற்போது சமோசா மாவை சிறு வட்டமாக உருட்டி அதில் இந்த மசாலாவை வைத்து முக்கோன வடிவில் மடியுங்கள்.

  இப்படி ஒவ்வொன்றாக செய்த பின்னர் அடுப்பில் கடாய் வைத்து வறுக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றுங்கள்.

  காய்ந்ததும் சமோசாக்களை ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக வறுத்து எடுங்கள்.

  அவ்வளவுதான் சமோசா தயார். இதற்கு டொமேட்டோ கெட்ச்அப் அல்லது புதினா சட்னி பொருத்தமாக இருக்கும்.

   

   
  Published by:Sivaranjani E
  First published: