இந்தியர்களின் உணவு பட்டியலில் குறிப்பாக தென்னிந்தியாவில் வசிக்கும் மக்களின் உணவு பட்டியலில் பருப்பு வகைகள் எப்போதுமே ஏதாவது ஒரு வகையில் இடம் பெற்றுவிடும். பருப்பு வகைகளில் பொதுவாகவே ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன. அதில் நாம் இன்று பார்க்கப் போகும் பாசிப்பருப்பு வகையானது அதிக அளவில் புரதச்சத்து மிகுந்ததாக உள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான இந்தியர்களின் உணவு பட்டியலில் பாசிப்பருப்பானது இடம்பெற்றுள்ளது. இதை வைத்து கிச்சடி போன்ற உணவு வகைகளையும் மக்கள் தயார் செய்கிறார்கள்
ஆனால் எப்போதாவது பாசிப்பருப்பு ரொட்டியை பற்றி நீங்கள் கேள்விப்பட்டு உள்ளீர்களா? பெரும்பாலானவர்களுக்கு இதைப்பற்றி தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. காரமான மசாலாக்களை பயன்படுத்தி பாசிப்பருப்பை சேர்த்து தயாரிக்கப்படும் இந்த மொறு மொறு ரொட்டியானது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். இந்த பாசிப்பருப்பு ரொட்டியை குழந்தைகள் மிகவும் உற்சாகத்துடன் ருசிப்பார்கள். இந்திய மக்களின் காலை உணவில் இந்த பாசிப்பருப்பு ரொட்டி அதிகம் இடம் பெறும். ஒருவேளை உங்களுக்கு இந்த பாசிப்பருப்பு ரொட்டி எப்படி தயார் செய்வது என்பதை பெற்று சரியாக தெரியவில்லை எனில் அதைப் பற்றி நாம் இப்போது பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - ஒரு கப்
பாசிப்பருப்பு - ஒரு கப்
சிவப்பு மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்
மஞ்சள் - ஒரு டீஸ்பூன்
பச்சை கொத்தமல்லி - 3 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பாசிப்பருப்பு ரொட்டி தயார் செய்வதற்கான செய்முறை:
முதலில் நாம் எடுத்து வைத்துள்ள பாசிப்பருப்பை நீரில் நன்றாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும். பிறகு ஒரு மணி நேரம் வரை அதை நீரில் ஊற வைக்க வேண்டும். பிறகு நம் ஊற வைத்த பாசிப்பருப்பை எடுத்து குக்கரில் போட்டு அதனுடன் மஞ்சள் தூளை சேர்த்து தேவையான அளவு நீர் மற்றும் உப்பு சேர்க்க வேண்டும்.
பிறகு குக்கரில் இரண்டிலிருந்து மூன்று விசில் வரும் வரை அதனை கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விடும். குக்கரில் உள்ள நீராவி முழுவதும் வெளியேறிய பின் அதன் அழுத்தம் முழுவதும் குறைந்தவுடன் நீரை வடிகட்டி மீண்டும் பாசிப்பருப்பை ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.
Read More : உங்களுக்கு காய்ச்சல் அடிக்கும்போது எந்த மாதிரியான உணவு உட்கொள்வது நல்லது..?
சூடு ஆறியதும் பாசிப்பருப்புடன் பச்சை கொத்தமல்லி சேர்த்து கலக்கவும். பிறகு கோதுமை மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அதில் தேவையான அளவு சிவப்பு மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
மசாலாக்கள் அனைத்தையும் மாவுடன் நன்றாக கலந்து நன்றாக பிசைந்து எடுத்துக் கொள்ள வேண்டும். தற்போது அந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பிறகு தட்டையாக அதனை செய்து கொள்ள வேண்டும். பிறகு நாம் ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள பாசிப்பருப்பு கலவையை மாவின் நடுவில் வைத்து மாவை நன்றாக மடித்து பிறகு மீண்டும் அதனை தட்டையாக செய்து கொள்ள வேண்டும்
கடைசியாக அடுப்பில் தவாவை வைத்து நன்றாக சூடேற்றி நாம் செய்து வைத்துள்ள மாவை அதில் போட்டு இரு புறமும் நன்றாக ரோஸ்ட் செய்ய வேண்டும். இந்த செயல்முறையின் போது அடுப்பின் தீயை மிதமான அளவில் வைக்க வேண்டும்.
மாவானது மொறுமொறுவென வரும் வரை இருபுறமும் மாற்று மாற்றி ரோஸ்ட் செய்ய வேண்டும். தேவையெனில் அவரவர் தேவைக்கேற்ப சிறிது என்னை சேர்த்து இதனை தயார் செய்யலாம். அவ்வளவுதான் சுவையான பாசிப்பருப்பு ரொட்டி தயார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chapati, Food recipes