ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

வித்தியாசமான சுவையில் பருப்பு உருண்டை ரசம் - எப்படி செய்வது..?

வித்தியாசமான சுவையில் பருப்பு உருண்டை ரசம் - எப்படி செய்வது..?

பருப்பு உருண்டை ரசம்

பருப்பு உருண்டை ரசம்

ஒரு முறை செய்து பாருங்கள்..பின்பு அடிக்கடி செய்து சாப்பிடுவீர்கள்...

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  பருப்பு உருண்டை காரக்குழம்பு செய்து சாப்பிட்டிருப்பீர்கள், ஆனால் இப்படி பருப்பு உருண்டை ரசம் செய்து சாப்பிட்டதுண்டா..? இதோ ரெசிபி.

  தேவையான பொருட்கள் :

  பருப்பு உருண்டை செய்ய

  ஊறவைத்த துவரம் பருப்பு - 1/2 கப்

  காய்ந்த மிளகாய் - 3

  பெருங்காயத்தூள் = 1/2 tsp

  உப்பு - 1/2 tsp

  நல்லெண்ணெய் - 1 tsp

  ரசம் வைக்க :

  நெய் - 2 tsp

  சீரகம் - 1/2 tsp

  கறிவேப்பிலை - 1 ஸ்பிரிங்

  பெருங்காயத்தூள் - 1/4 tsp

  புளி தண்ணீர் - 1 கப்

  தக்காளி - 1

  தனியா பொடி - 2 tsp

  சீரகப் பொடி - 1 tsp

  மஞ்சள் பொடி - 1/2 tsp

  மிளகு பொடி - 1/2 tsp

  மிளகாய் பொடி - 1/2 tsp

  வெல்லம் - 1 tsp

  உப்பு - தே.அ

  செய்முறை :

  முந்தைய நாள் இரவே துவரம் பருப்பை தண்ணீரில் ஊற வைத்துக்கொள்ளுங்கள்.

  மிக்ஸியில் உருண்டைக்குக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து ஒன்றும் பாதியுமாக அரைத்துக்கொள்ளவும்.

  இட்லி குக்கரில் நல்லெண்ணெய் தடவி பருப்பை உருண்டைகளாக உருட்டி அதில் வைத்து வேக வைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

  10 நிமிடங்கள் கழித்து உருண்டையை எடுத்தால் தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.

  சப்பாத்தி, தோசைக்கு பொருத்தமான உருளைக் கிழங்கு பட்டாணி குருமா..! எப்படி செய்வது..?

  அடுத்ததாக ரசம் வைக்க பாத்திரம் வைத்து நெய் ஊற்றி கடுகு , சீரகம் சேர்த்து தாளிக்கவும்.

  பின் கறிவேப்பிலை , பெருங்காயத்தூள் சேர்க்கவும். அடுத்ததாக புளித்தண்ணீர் சேர்க்கவும். தக்காளியையும் கரைத்து ஊற்றவும்.

  அதோடு மஞ்சள், தனியா , சீரகம் , மிளகு, காய்ந்த மிளகாய் ஆகிய பொடிகளை சேர்க்கவும்.

  பின் வெல்லம் மற்றும் உப்பு சேர்க்கவும். அடுத்ததாக் 2  1/2 கப் தண்ணீர் சேர்க்கவும்.

  ரசம் பொங்கி வரும் போது உருண்டைகளை சேர்க்கவும். மீண்டும் 5 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.

  முடிந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள். அவ்வளவுதான் பருப்பு உருண்டை ரசம் தயார்.

  Published by:Sivaranjani E
  First published: