சாதத்துடன் கலந்து சாப்பிட ’பருப்பு பொடி’ - செய்முறை இதோ

ந்த சுவையை நீங்களும் தெரிந்துகொள்ள இன்றே முயற்சி செய்து பாருங்கள்.

சாதத்துடன் கலந்து சாப்பிட ’பருப்பு பொடி’ - செய்முறை இதோ
பருப்பு பொடி
  • Share this:
ஆந்திரா மெஸ் சென்றாலே முழு மீல்ஸ் எனில் அதில் கட்டாயம் பருப்புப் பொடி இருக்கும். சாதத்துடன் நெய் விட்டு பிசைந்து சாப்பிட்டால் கைகளில் ஒட்டியிருக்கும் பருக்கையைக் கூட விட்டு வைக்க மாட்டோம். அவ்வளவு சுவையாக இருக்கும். அந்த சுவையை நீங்களும் தெரிந்துகொள்ள இன்றே முயற்சி செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள் :

துவரம் பருப்பு - 1 கப்


பாசி பருப்பு - 1 கப்
உடைத்த கடலை - 1 கப்
காய்ந்த மிளகாய் - 5சீரகம் - 2 tsp
பெருங்காயக் கட்டி - 1 சிறிதளவு
கறிவேப்பிலை - 2 ஸ்பிரிங்
எண்ணெய் - 1 tsp
பூண்டு - 10
கல் உப்பு - 1 tspசெய்முறை :

மேலே கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பொருளையும் எண்ணெய் இல்லாமல் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளுங்கள்.

பூண்டை மட்டும் எண்ணெய் ஊற்றி வதக்கிக்கொள்ளுங்கள்.

மாலையில் சுடச்சுட சுவைத்து பாருங்க பாசிப் பருப்பு அல்வா..! 10 நிமிடத்தில் செய்ய ரெசிபி

பின் அனைத்தையும் ஆற வைத்து சூடு தனிந்ததும் மிக்ஸியில் மொத்தமாகப் போட்டு அதோடு கல் உப்பும் சேர்த்து அரையுங்கள். பொடியாகும் வரை மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

 

பின் அதை காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து தேவைப்படும் போது சாதத்தில் தூவி நெய் ஊற்றி சாப்பிடலாம்.
First published: July 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading