Home /News /lifestyle /

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த பப்பாளிக் காய் பொறியல் - ரெசிபி இதோ...

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த பப்பாளிக் காய் பொறியல் - ரெசிபி இதோ...

பப்பாளிக்காய் பொறியல்

பப்பாளிக்காய் பொறியல்

பப்பாளிப் பழத்தைப் போல் அதன் காயும் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

    பப்பாளிப் பழத்தைப் போல் அதன் காயும் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. உடல் எடையைக் குறைக்க உதவும். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

    தேவையான பொருட்கள் :

    பப்பாளிக்காய் - 250 கிராம்
    எண்ணெய் - 1 tsp
    கடுகு - 1 tsp
    சீரகம் - 1 tsp
    பெருங்காயத் தூள் - 1/4 tsp
    மஞ்சள் - 1 tsp
    பச்சை மிளகாய் - 2
    உப்பு - தே. அளவு



    செய்முறை :

    பப்பாளியை நீள வாக்கில் சீவல் போல் சீவிக்கொள்ளுங்கள்.

    கடாயில் எண்ணெய் விட்டு கடுகு மற்றும் சீரகம் சேர்த்து தாளித்துக்கொள்ளுங்கள்.

    அடுத்ததாக பச்சை மிளகாய் மஞ்சள் சேர்த்து வதக்கியதும் பப்பாளி சீவலை சேர்த்து பிரடுங்கள். உப்பு சேர்த்து வதக்குங்கள்.

    தண்ணீர் சேர்க்கக் கூடாது. பப்பாளி வேகும் வரை தட்டுபோட்டு மூடி சிறு தீயில் வேக வையுங்கள்.

    வெந்ததும் இறக்கிவிடுங்கள். அவ்வளவுதான் பப்பாளிக்காய் பொறியல் தயார்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    பார்க்க :

     

     

     

     

     
    Published by:Sivaranjani E
    First published:

    அடுத்த செய்தி