ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

வீட்டில் தயிர் மிஞ்சிவிட்டதா..? அதை வைத்து பனீர் தயாரிப்பது எப்படி என தெரிந்துகொள்ளுங்கள்

வீட்டில் தயிர் மிஞ்சிவிட்டதா..? அதை வைத்து பனீர் தயாரிப்பது எப்படி என தெரிந்துகொள்ளுங்கள்

பனீர்

பனீர்

மீதம் அடைந்த தயிரை வைத்து மிக எளிமையாக பனீர் தயாரிக்க முடியும் என்ற தகவல் நம்மில் பலருக்கு தெரிவதில்லை. வீட்டிலேயே புத்தம் புதிய பனீர் தயாரிப்பது எப்படி என்பதை இந்தச் செய்தியில் தெரிந்துகொள்ளலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தயிர் என்பது இந்திய மக்களின் உணவுப் பட்டியலில் மிக மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. குறிப்பாக, கோடை காலங்களில் தயிர் இல்லாத வீடு ஒன்றை நீங்கள் பார்க்க இயலாது. ஆனால், நமது தேவைக்கு மிகுதியாக வீட்டில் தயிர் மிஞ்சி விடுகிறபோது அதை நாம் தூக்கி எறிய வேண்டியுள்ளது.

ஆனால், மீதம் அடைந்த தயிரை வைத்து மிக எளிமையாக பனீர் தயாரிக்க முடியும் என்ற தகவல் நம்மில் பலருக்கு தெரிவதில்லை. வீட்டிலேயே புத்தம் புதிய பனீர் தயாரிப்பது எப்படி என்பதை இந்தச் செய்தியில் தெரிந்து கொள்ளலாம்.

மிக விருப்பமான பனீர்

பால் சார்ந்த உற்பத்தி பொருட்களில் பனீருக்கு மிக முக்கியமான இடம் உண்டு என்பதை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பன்னீர் மிகவும் சுவையானது என்பதோடு மட்டுமல்லாமல் நம் உடல் நலனுக்கும் நல்லது. குறிப்பாக இதை நாம் வீட்டிலேயே தயார் செய்தால் புதிதாகவும், பாதுகாப்பு மிகுந்ததாகவும் இருக்கும்.

செய்முறை

தயிரில் இருந்து பனீர் தயார் செய்வதற்கு நல்ல ஆழம் கொண்ட பாத்திரம் ஒன்றை எடுத்துக் கொள்ளவும். அதில் 3 கப் பால் சேர்க்கவும். அதை மிதமான தீயில் சூடுபடுத்தி, கொதி நிலைக்கு கொண்டு வர வேண்டும். பின்னர், வீட்டில் மீதமடைந்த 1 ½ கப் தயிர் எடுத்து நன்றாக கலக்கி விடவும்.

இதற்கிடையே, தீயை மிக மெதுவாக குறைத்து விட வேண்டும். இப்போது பாலுடன் தயிர் சேர்த்து கிளறி விடவும். சிறிது நேரத்தில் பால் நன்றாக உறைந்து வருவதையும், அதில் இருந்து தண்ணீர் பிரிவதையும் நீங்கள் பார்க்க முடியும்.

வடித்து எடுக்கவும்

அடுத்ததாக தூய்மையான கடாய் ஒன்றை எடுத்துக் கொள்ளவும். அதன் மீது வெள்ளை நிற துணி ஒன்றை கட்டி வைக்கவும். இப்போது காய்ச்சி வைத்த பால் தயிர் கலவையை இதன் மீது ஊற்றவும். இதன் மூலமாக கலவையில் உள்ள தேவையற்ற தண்ணீரை நீக்கிவிட முடியும்.

கோடைக்காலத்தில் முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிட கூடாதா..?

சுமார் 3 முதல் 4 மணி நேரம் வரையில் இந்தக் கலவையை ஃபிரிட்ஜில் வைத்து எடுக்கவும். துணியை நீக்கி விட்டு பார்த்தால், உங்களுக்கான பனீர் தயார் நிலையில் இருக்கும். இதை உங்களுக்கு விருப்பமான வடிவங்களில் வெட்டி வைத்துக் கொண்டு, தேவையான சமையங்களில் எடுத்து சமைத்துக் கொள்ளலாம்.

இதையும் கவனிக்கவும்

நீங்கள் பனீர் தயாரிப்பதற்காக எடுத்துக் கொள்ளும் தயிரை நன்றாக கலக்கி வைக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் முறையாக கலக்கவில்லை என்றால் பன்னீர் கிடைக்காது. நன்றாக கலக்கிய பிறகே தயிரை சூடான பாலுடன் சேர்க்க வேண்டும்.

First published:

Tags: Curd, Paneer