சப்பாத்திக்கு பொருத்தமான பனீர் பட்டர் மசாலா - சூப்பராக செய்ய ரெசிபி

சப்பாத்திக்கு பொருத்தமான பனீர் பட்டர் மசாலா - சூப்பராக செய்ய ரெசிபி

பனீர் பட்டர் மசாலா

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.

  • Share this:
    சப்பாத்திக்கு கிழங்கு, குருமா என செய்து போரடித்தது போதும். வட இந்திய சுவையில் பனீர் பட்டர் மசாலா செய்து கொடுங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.

    தேவையான பொருட்கள் :

    வதக்கி அரைக்க

    எண்ணெய் - 1 tbsp
    ஏலக்காய் - 2
    வெங்காயம் - 1 கப்
    தக்காளி - 1 1/2 கப்
    உப்பு - 1/4 tsp
    சர்க்கரை - 3/4 tsp
    முந்திரி - 12
    காய்ந்த மிளகாய் பொடி - 1/2 tsp
    கரம் மசாலா - 3/4 tsp
    தனியா பொடி - 1 tsp

    மொறு மொறு சுவையில் டீ- க்கு பொருத்தமாக இருக்கும் ’முருங்கைக்காய் வடை ‘ : ரெசிபி இதோ...

    பனீர் பட்டர் மசாலா

    பிரிஞ்சு இலை - 1
    பட்டை - 1 இஞ்ச்
    ஏலக்காய் - 2
    கிராம்பு - 2
    வெண்ணெய் - 1 1/2 tsp
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 tsp
    மிளகாய் பொடி - 1/4 tsp
    பனீர் - 250 கிராம்
    கசூரி மேத்தி - 1 tsp
    மில்க் கிரீம் - 3 tsp
    கொத்தமல்லி - சிறிதளவு



    செய்முறை :

    பனீரை சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள்.

    வதக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை கடாயில் சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள். பின் சூடு தணிந்ததும் மிக்ஸியில் போட்டு மைய அரைத்துக்கொள்ளுங்கள். கொஞ்சம் தண்ணீர் ஊற்றி மீண்டும் அரையுங்கள். அதை தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.

    தற்போது அதே கடாயில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் பட்டை, கிராம்பு சேருங்கள். பொறிந்ததும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேருங்கள்.

    அடுத்ததாக அரைத்து வைத்துள்ள மசாலா கிரேவியை ஊற்றுங்கள். ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக்கொள்ளுங்கள். தற்போது மூடி கொதிக்க வையுங்கள்.

     

    தண்ணீர் வற்று கெட்டிப்பதம் வந்ததும் பனீரை சேர்த்து பிரட்டுங்கள். அடுத்ததாக கிரீம், கசூரி மேத்தி சேர்த்து கிளறுங்கள். இறுதியாக கொத்தமல்லி தூவி இறக்கிவிடுங்கள்.

    அவ்வளவுதான் சுவையான பனீர் பட்டர் மசாலா தயார்.
    Published by:Sivaranjani E
    First published: