சட்டென செய்ய சூப்பரான பனீர் மசாலா ரெசிபி இதோ....

சட்டென செய்ய சூப்பரான பனீர் மசாலா ரெசிபி இதோ....

பனீர் புர்ஜி

 • Share this:
  பனீர் சுவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடியது. எனவே அதை வைத்து பனீர் புர்ஜி எப்படி செய்வது என்று பார்க்கலாம். இதை சப்பாத்தியுடனோ அல்லது அப்படியேவும் சாப்பிடலாம். எப்படி பனீர் புர்ஜி செய்வது என்று பார்க்கலாம்.

  தேவையான பொருட்கள் :

  பனீர் - 200 கிராம்
  எண்ணெய் - 1 Tbsp
  நெய் - 1 Tsp
  சீரகம் - 1/2 Tsp
  சோம்பு - 1/2 Tsp
  வெங்காயம் - 2
  பச்சை மிளகாய் - 2
  குடை மிளகாய் - 1
  இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 Tsp
  தக்காளி - 1
  உப்பு - 1 Tsp
  மஞ்சள் பொடி - 1/4 Tsp
  காஷ்மீர் சிவப்பு மிளகாய் - 2 Tsp
  தனியா பொடி - 1 Tsp
  சீரகப்பொடி - 1 Tsp
  கரம் மசாலா - 1/4 Tsp
  எலுமிச்சை சாறு - பாதியளவு
  கொத்தமல்லி - சிறிதளவு  செய்முறை :

  கடாய் வைத்து எண்ணெய் , நெய் விட்டு காய்ந்ததும் சோம்பு, சீரகம் சேர்த்து தாளியுங்கள்.

  பின் பச்சை மிளகாய் , வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். அடுத்ததாக இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்குங்கள்.

  பின் தக்காளி சேர்த்து வதக்கியதும் மிளகாய் தூள், தனியாப்பொடி , சீரகப் பொடி சேர்த்து வதக்கவும்.

  குளிருக்கு இதமான ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சிக்கன் சூப் : எப்படி செய்வது தெரியுமா..?

  பனீரை நறுக்கி பின் கைகளால் தூளாக்கிக்கொள்ளுங்கள். பின் அதை வதக்கி வைத்துள்ள மசாலாவில் சேர்த்து பிரட்டி எடுங்கள்.

  உப்பு சேர்த்து பிரட்டி எடுங்கள். இறுதியாக கரம் மசாலா தூவி பிரட்டிவிட்டு கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள்.

   

   
  Published by:Sivaranjani E
  First published: