தித்திக்கும் சுவையில் தெகிட்டாத பால்கோவா

பண்டிகைகால ஸ்பெஷல் ஸ்வீட்

Web Desk | news18
Updated: March 17, 2019, 1:23 PM IST
தித்திக்கும் சுவையில் தெகிட்டாத பால்கோவா
பால்கோவா
Web Desk | news18
Updated: March 17, 2019, 1:23 PM IST
பால்கோவா என்றாலே எல்லோருக்கும் பிடித்தமான ஸ்வீட். பண்டிகைகளிலும் பால்கோவாவைத் தவிர்க்க முடியாது. பாலைத் திரட்டி நெய் ஊற்றி சமைக்கும் சுவையும் மணமும் சொல்ல முடியாதவை.

தேவையான பொருட்கள்

பால் - 1 லிட்டர்


சர்க்கரை - 1/2 கப்
ஏலக்காய் - 1 மேசைக்கரண்டி
நெய் - 1 மேசைக்கரண்டி

Loading...செய்முறை :

பாத்திரத்தில் பால் ஊற்றி நன்கு அது கெட்டியான பதத்திற்கு இறுகும் வரை கொதிக்க விடுங்கள். பால் அடி பிடிக்காமல் இருக்க அவ்வபோது கிளறிக் கொண்டே இருங்கள்.

நன்கு இறுகி க்ரீமியான நிலையை அடையும்போது சர்க்கரை சேர்த்துக் கொள்ளுங்கள்.

சர்க்கரை சேர்த்துக் கிளறிக் கொண்டே இருந்தால் பால்கோவா நிலையை அடையும். பின் அதில் முற்றிலும் நீர் இறுகி கட்டியாகும் வரை கிளறிக் கொண்டே இருங்கள்.

இறுகிய நிலை அடையும் போது நெய் ஊற்றிக் கிளறுங்கள்.
இறுதியாக, ஏலக்காய்ப் பொடி தூவிப் பரிமாறுங்கள். இந்த பால்கோவாவை இரண்டு அல்லது மூன்று நாட்கள் வைத்து உண்ணலாம்.
First published: March 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...