மதிய உணவுக்கு ஜம்முனு இருக்கும் பக்கோடா கூட்டு : எப்படி செய்வது தெரியுமா..?

மதிய உணவுக்கு ஜம்முனு இருக்கும் பக்கோடா கூட்டு : எப்படி செய்வது தெரியுமா..?

பக்கோடா கூட்டு

மொறு மொறு சுவையில் தொட்டுக்கொள்ள சூப்பர் சுவையாக இருக்கும்.

 • Share this:
  பகோடா கூட்டு சாம்பார், காரக் குழம்பு என அனைத்து வகைகளுக்கும் பொருத்தமாக இருக்கும். மொறு மொறு சுவையில் தொட்டுக்கொள்ள சூப்பர் சுவையாக இருக்கும்.

  தேவையான பொருட்கள் : 

  பகோடா - 1 கப்
  வெங்காயம் - 1
  எள் - 2 tsp
  வேர்க்கடலை - 2 tsp
  மிளகாய் தூள் - 1 tsp
  தனியா பொடி - 1 tsp
  தனியா - 1/2 tsp
  கருவேப்பிலை - சிறிதளவு
  பச்சை மிளகாய் - 3
  இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 tsp
  மஞ்சள் பொடி - 1/2 tsp
  கடலை மாவு - 1/2 கப்
  அரிசி மாவு - 2 tsp
  கொத்தமல்லி - சிறிதளவு
  உப்பு - தே.அ
  எண்ணெய் - தே.அ  செய்முறை :

  முதலில் கடாய் வைத்து வேர்க்கடலை மற்றும் எள்ளை வறுத்து மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

  பின் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கருவேப்பிலை, வெங்காயம் , இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள்.

  நன்கு வதங்கியதும் அரைத்த பேஸ்டை சேர்த்துக்கொள்ளுங்கள். அதுல் 3/4 கப் தண்ணீர் ஊற்றிக்கொள்ளுங்கள்.

  நொடியில் செய்யலாம் ஹெல்தி சாண்ட்விச் : மாலையில் டீ டைமில் செய்து சாப்பிட்டுப் பாருங்கள்..!

  அதோடு மஞ்சள், தனியா பொடி, மிளகாய் பொடி சேர்த்து கலந்துகொள்ளுங்கள். உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்.

  கொதித்ததும் அதில் பகோடா சேர்த்து கிளறவும். பின் தட்டுப்போட்டு மூடி 3-5 நிமிடங்கள் கொதிக்கவிடவும். அதில் உள்ள தண்ணீர் வற்றியதும் இறுதியாக கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள்.

   

   
  Published by:Sivaranjani E
  First published: