தமிழ் புத்தாண்டை வரவேற்க பால் பாயாசம்..! இப்படி செஞ்சு பாருங்க சுவையாக இருக்கும்..!

தமிழ்ப் புத்தாண்டு பிறப்பை மகிழ்ச்சியோடு வரவேற்க பால் பாயாசம் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

தமிழ் புத்தாண்டை வரவேற்க பால் பாயாசம்..! இப்படி செஞ்சு பாருங்க சுவையாக இருக்கும்..!
பால் பாயாசம்.
  • Share this:
பால் பாயாசம் என்பது இந்தியர்களின் பாரம்பரிய இனிப்பு சுவை. மகிழ்ச்சியை வரவேற்க இனிப்பு சுவைதான் முதலில் பரிமாறப்படும். அந்த வகையில் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பை மகிழ்ச்சியோடு வரவேற்க பால் பாயாசம் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

நெய் - 1/4 tsp


அரிசி - 3 tsp
பால் - 2 லிட்டர்
சர்க்கரை - 1/2 கப்

செய்முறை :

முதலில் அரிசியை நன்கு கழுவி , துணியை விரித்து அதில் காய வையுங்கள்.

அடுத்ததாக கடாயில் கொஞ்சம் நெய் விட்டு அரிசியை சற்று பொன்னிறமாக வறுக்கவும். கருக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

அடுத்ததாக பாலை ஊற்றுங்கள். பால் நன்குக் கொதி வந்து அரிசியுடன் கலந்ததும் சிறு தீயில் வைத்துக்கொள்ளுங்கள்.

தற்போது மெதுவாக பாயாசம் வேகட்டும். அடிக்கடி அடி பிடிக்காமல் இருக்க கிளறிக்கொண்டே இருங்கள்.

இன்னைக்கு வீட்டில் புடலங்காய் பொரியல் செஞ்சு பாருங்க..!

பால் சுண்டி, அரிசியும் வெந்திருந்தால் அடுத்ததாக சர்க்கரை சேர்த்துக்கொள்ளுங்கள்.

பின் அடுப்பை அணைத்துவிடுங்கள். தாளிக்க கடாயில் நெய் விட்டு அதில் முந்திரி , திராட்சைகள் சேர்த்து வறுத்து பாயாசத்தில் கொட்டவும்.

அவ்வளவுதான் சுவையான பால் பாயாசம் தயார்.

பார்க்க :
First published: April 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading