முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / வெங்காய புலாவ் செய்ய தெரியுமா..? இல்லையெனில் இங்கே கிளிக் செய்க...

வெங்காய புலாவ் செய்ய தெரியுமா..? இல்லையெனில் இங்கே கிளிக் செய்க...

வெங்காய புலாவ்

வெங்காய புலாவ்

வீட்டில் தக்காளி இல்லை, காய்கறி இல்லை ஆனாலும் வாய்க்கு ருசியாக சாப்பிட வேண்டும் என நினைத்தால் இதை டிரை பண்ணி பாருங்க...

  • 1-MIN READ
  • Last Updated :

வீட்டில் தக்காளி இல்லை, காய்கறி இல்லை ஆனாலும் வாய்க்கு ருசியாக சாப்பிட வேண்டும் என நினைத்தால் வெங்காய புலாவ் செய்து சாப்பிடலாம். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

நெய் - 2 tsp

பச்சை மிளகாய் - 3

இஞ்சி - 4 துண்டு

பூண்டு - 5 பற்கள்

பாஸ்மதி அரிசி - 3 கப்

வெங்காயம் - 3

உப்பு - தே.அ

சோம்பு - 1 tsp

பட்டை, பிரிஞ்சு இலை - 1

வெங்காயத்தாள் - சிறிதளவு

தேங்காய் பால் - 1 1/2 கப்

செய்முறை :

தேங்காய் அரைத்து கொஞ்சம் தண்ணீர் கலந்த பதத்தில் பால் எடுத்துக்கொள்ளுங்கள். வெங்காயம் நீள வாக்கில் நறுக்க வேண்டும்.

பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

உடலுக்கு ஆற்றல் தரும் 'வெஜிடபிள் சூப்'...! ரெசிபி இதோ..

குக்கரில் நெய் விட்டு, பட்டை, பிரிஞ்சு இலை மற்றும் சோம்பு சேர்த்து தாளியுங்கள். பின் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். அதோடு அரைத்த இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும்.

பின் தேங்காய் பால் ஊற்றி மீதம் 3 கப் தண்ணீர் ஊற்றவும். ஊற வைத்துள்ள பாஸ்மதி அரிசியை கொட்டி கிளறுங்கள்.

உப்பு சேர்த்து ருசி பார்த்துக்கொள்ளுங்கள். குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் தானாக ஃபிரஷர் இறங்கும் வரை காத்திருந்து பின் மூடியை திறங்கள். அப்போது ஸ்பிரிங் ஆனியன் தூவி அதோடு அரை ஸ்பூன் நெய் சேர்த்து பதமாகக் கிளறுங்கள்.

அவ்வளவுதான் சுவையான வெங்காயப் புலாவ் ரெடி...

First published: