மாலையில் டீ போட்டீங்கன்னா.. இதையும் செஞ்சு கொடுங்க..!

மாலையில் டீ போட்டீங்கன்னா.. இதையும் செஞ்சு கொடுங்க..!
வெங்காய பக்கோடா
  • Share this:
மாலையில் ஒரு கிளாஸ் டீயுடன் வெங்காய பக்கோடா சுட சுட ஒரு பிளேட் செஞ்சு சாப்பிட்டால் எவ்வளவு ருசியாக இருக்கும்..! செய்து சாப்பிட ஆவலாக இருக்கா..? இதோ செய்முறை

தேவையான பொருட்கள்

பெரிய வெங்காயம் - 4


கடலை மாவு - 1 கப்
மிளகாய் தூள் - 1 tsp
மல்லித்தூள் - 1/2 tspகரம் மசாலா தூள்
சோடா மாவு - ஒரு சிட்டிகை
உப்பு - தே அளவு
எண்ணெய் - பொரிக்கசெய்முறை ;

வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும். அதை உதிரியாக பிசைந்து அதில் உப்பு, மிளகாய் தூள், மல்லி தூள் என கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து நன்குப் பிசைந்துகொள்ளுங்கள்.

தண்ணீர் ஊற்ற வேண்டாம். வெங்காயத்தில் இருக்கும் தண்ணீரே போதுமானது. அதை நன்கு மசாலாக்கள் சேரும் வரை பிசைந்து கொள்ளுங்கள். 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

பின் எண்ணெய் கடாயில் ஊற்றி காய வைக்கவும். காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள வெங்காயத்தை எண்ணெய்யில் உதிரி உதிரியாகப் போடவும். அவ்வளவுதான் சுவையான வெங்காய பகோடா தயார்.

 
First published: April 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading