• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • சுவையான ஆம்லெட் கறி ரெசிபி இதோ..

சுவையான ஆம்லெட் கறி ரெசிபி இதோ..

ஆம்லெட் கறி

ஆம்லெட் கறி

மதிய உணவுக்கு வித்தியாசமான ரெசிபி ட்ரை பண்ண வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.

  • Share this:
    எப்போதும் போர் அடிக்கும் சமையலா என புலம்பும் உங்கள் குடும்பத்தினர்களுக்கு இப்படி வித்தியாமான முறையில் ஆம்லெட் கறி செய்துகொடுங்கள். இது மதிய உணவுக்கு பொருத்தமான உணவாக இருக்கும்.

    தேவையான பொருட்கள் :

    முட்டை - 2
    வெங்காயம் - 1
    பச்சை மிளகாய் - 1
    கொத்தமல்லி - சிறிதளவு
    உப்பு - தே.அ

    வெங்காயம் பேஸ்ட் :

    வெங்காயம் - 1
    பச்சைமிளகாய் - 2
    தனியா - 1 tbsp
    மிளகு - 2 tbsp
    இஞ்சி - 1 துண்டு
    பூண்டு - 4 பற்கள்
    கொத்தமல்லி , புதினா - சிறிதளவு
    தக்காளி - 1

    தேங்காய் பேஸ்ட் அரைக்க :

    தேங்காய் - 2 tbsp
    கசகசா - 1 tbsp

    தயிர் பேஸ்ட் செய்ய :

    தயிர் - 1/2 கப்
    மஞ்சள் - 1 tbsp
    உப்பு - தே.அ

    தாளிக்க :

    எண்ணெய் - 2 tbsp
    பட்டை - 1 துண்டு
    ஏலக்காய் - 1
    கருவேப்பிலை - சிறிதளவு
    வெங்காயம் - 1
    கொத்தமல்லி - சிறிதளவு



    செய்முறை :

    முதலில் முட்டையை ஆமெல்ட் போட வேண்டும். எனவே அதற்கு முட்டைகளை உடைத்து ஊற்றி அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்கு அடித்துக்கொண்டு பின் தோசைக்கல்லில் எண்ணெய் தடவில் ஆம்லெட் போட்டு எடுத்துக்கொள்ளுங்கள்.

    அடுத்ததாக அரைக்க கொடுக்கப்பட்டுள்ளவற்றை அரைத்து வைத்துக்கொள்ளுங்கள்.

    தற்போது கடாய் வைத்து தாளிக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வந்ததும் அரைத்த வெங்காயம் விழுதை சேர்த்து நன்கு வதக்கவும். நன்கு சுருங்கி பச்சை வாசனை போனதும் தேங்காய் பேஸ்டை கலந்து வதக்கவும்.

    Also Read : எண்ணெயில் எந்த உணவுப்பொருளை பொறித்தாலும் இதுதான் ரூல்ஸ்.. தெரிந்துக்கொள்ளுங்கள்..

    பின் தயிர் மிக்ஸிங்கை சேர்க்கவும். அடுத்ததாக தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடுங்கள். நன்கு 20 நிமிடங்கள் கொதித்து கெட்டியானதும் போட்டு வைத்துள்ள ஆம்லெட்டை துண்டு துண்டுகளாக வெட்டியோ அல்லது அப்படியோ உங்கள் விருப்பம் போல் போட்டு கலந்துவிட்டு கொத்தமல்லி தழை தூவி தட்டுபோட்டு மூடிவிடுங்கள்.

    சிறிது நேரம் கழிந்து திறக்க ஆம்லெட் குழம்பில் ஊறி நல்ல ருசி கொடுக்கும். அவ்வளவுதான் ஆம்லெட் கறி தயார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: