பொதுவாக முட்டையில் குழம்பு வைத்து சாப்பிட்டு பார்த்திருப்பீங்க. ஆனால் ஆம்லெட் வைத்து வித்தியாசமாக சூப்பரான முட்டை ஆம்லெட் குழம்பை செய்து சாப்பிட்டுருக்கீங்களா? இந்த பதிவில் எப்படி செய்வது என்று தெரிந்துக்கொள்ளலாம் .
தேவையான பொருட்கள்:
பச்சை மிளகாய் - 2
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் - அரை ஸ்பூன்
உப்பு, மஞ்சள்தூள் - தேவையான அளவு
கொத்தமல்லித் தழை - தேவையான அளவு
மல்லித்தூள் - அரை ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்
தேங்காய் துருவல் - ஒரு கைப்பிடி
முந்திரி - 10
கடுகு - அரை ஸ்பூன்
சீரகம் - அரை ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1. முதலில் வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். அத்துடன் தக்காளியை சுடுதண்ணீரில் போட்டு 5 நிமிடம் கொதிக்க விட்டு ஆறியதும் தோலை உரித்து மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ள வேண்டும்.
2. அதன் பிறகு முந்திரி, தேங்காய் துருவலை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.
3. அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் முட்டை, மிளகு தூள், சிறிது மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, 1 வெங்காயம் பொடியாக நறுக்கியது போட்டு நன்றாக கலந்து வைக்க வேண்டும்.
4. கலந்து வைத்த முட்டை கலவையை குக்கரில் 10 நிமிடம் வைத்து வேக வைக்க வேண்டும். வெந்தவுடன் அதனை ஆற வைத்து சதுரமாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
5. பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டுத் தாளித்த பின் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும். அத்துடன் இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கிய பின்னர் மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.
6. அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுது, தேங்காய் விழுததை சேர்க்க வேண்டும். தேவையான தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.
7. கிரேவி நன்றாக கொதித்து கெட்டியாகியவுடன் வெட்டி வைத்துள்ள ஆம்லெட் துண்டுகளை போட்டு 5 நிமிடம் மிதமான தீயில் வைக்க வேண்டும். அதில் கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் முட்டை ஆம்லெட் குழம்பு ரெடி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Egg recipes