காலையில் சாப்பிட நேரமில்லையா? இரண்டே நிமிடத்தில் ஹெல்தியான ஓட்ஸ் ஸ்மூத்தி செய்து அருந்துங்கள்..

காலை உணவை தவிர்ப்பதை விட இப்படி எளிமையான உணவாக எடுத்துக்கொள்வதால் நேரமும் மிச்சம் ஆரோக்கியமும் கெடாது.

காலையில் சாப்பிட நேரமில்லையா? இரண்டே நிமிடத்தில் ஹெல்தியான ஓட்ஸ் ஸ்மூத்தி செய்து அருந்துங்கள்..
ஹெல்தியான ஓட்ஸ் ஸ்மூதீ
  • News18 Tamil
  • Last Updated: September 16, 2020, 2:51 PM IST
  • Share this:
காலை உணவு சமைக்க நேரமில்லை. அமர்ந்து சாப்பிட நேரமில்லை. அவசர வேலை என பல காரணங்களால் காலை வேலையை தவிர்ப்பவர்கள் ஏராளம். அவ்வாறு தவிர்ப்பதை விட இப்படி எளிமையான உணவாக எடுத்துக்கொள்வதால் நேரமும் மிச்சம் ஆரோக்கியமும் கெடாது. எனவே ஓட்ஸில் எப்படி ஹெல்த்யான ஸ்மூதி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

ஓட்ஸ் - 3 tbsp


ஆப்பிள் - 1
பேரிட்சை - 5
பால் - 1 கப்பட்டை பொடி - 1/2 tspசெய்முறை :

காலையில் எழுந்ததுமே பாலை காய்ச்சிக்கொள்ளுங்கள்.

கிண்ணத்தில் ஓட்ஸ், நறுக்கிய ஆப்பிள், கொட்டை நீக்கிய பேரிட்சை ஆகியவற்றை சேர்த்து அரை கப் காய்ச்சிய பால் ஊற்றி ஊற வைத்துவிடுங்கள். ( ஆப்பிளுக்கு பதிலாக வாழைப்பழம் கூட சேர்த்துக்கொள்ளலாம் )

ஹெல்தியான ஸ்னாக்ஸுக்கு கீரை வடை : எந்த கீரையிலும் செய்யலாம்... அருமையாக இருக்கும்

பின் உங்கள் வேலையை செய்து முடித்துவிட்டு கிளம்பி தயாராகுங்கள்.

கிளம்பி ரெடியானதும் ஊற வைத்த ஓட்ஸை மிக்ஸியில் போட்டு அதோடு மீதம் உள்ள அரை கிளாஸ் பாலைக் கலந்து மைய அரைத்து கிளாஸில் ஊற்றி பருகலாம்.

ஸ்மூதியை மேலும் ஊட்டச்சத்தாக மாற்ற உலர்ந்த பழங்கள், நட்ஸ் வகைகளை உடைத்து சேர்க்கலாம்.
First published: September 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading