உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கும், ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொண்டவர்களும் விரும்பி உண்ணும் காலை உணவாக ஓட்ஸ் என்ற முழுதானிய உணவுகள் உள்ளது. ஓட்ஸ் தானியத்தை, பால் அல்லது தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்தால், சுவையான ஓட்ஸ் உணவு தயார். ஓட்ஸ் உணவுடன், பழங்கள் மற்றும் சர்க்கரை சேர்த்து பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
ஓட்ஸைக் கொண்டு இட்லி, தோசை, ஊத்தப்பம், குக்கீஸ், ஸ்மூத்தி, உப்புமா போன்ற பலவகையான உணவுகளை சத்தாகவும், சுவையாகவும் தயாரிக்க முடியும். 100 கிராம் ஓட்ஸில், 12 கிராம் கார்போஹைட்ரேட், 2.4 கிராம் புரதம், 1.4 கிராம் கொழுப்பு, 0.2 கிராம் நிறைவுறாத கொழுப்பு, 0.4 கிராம் பாலி அன்சாசுரேடட் கொழுப்பு, 0.4 கிராம் மோனா சாச்சுரேடட் கொழுப்பு, 1.7 கிராம் நார்ச்சத்து அத்துடன் மினரல்கள், வைட்டமின்கள் நிறைந்துள்ளது.
இத்தனை ஆரோக்கியமான விஷயங்களைக் கொண்ட ஓட்ஸை வைத்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செய்யக்கூடிய ஓட்ஸ் மினி ஊத்தப்பம் செய்வது எப்படி என பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் - 1/2 கப்
துருவிய கேரட் - 1/2 கப்
குடைமிளகாய் - 1/3 கப்
ரவை- 1/3 கப்
பன்னீர் - 1/3 கப்
பச்சை மிளகாய் - 1 டிஸ்பூன்
மஞ்சள் நிற குடைமிளகாய் - தேவைக்கு ஏற்ப
வெஜின் ஆலிவ் ஆயில் - 1 டிஸ்பூன்
மஞ்சள் மிளகு தேவைக்கேற்ப
கெட்டியான புளித்த தயிர் - 4 டிஸ்பூன்
கருப்பு மிளகு - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
also read : சப்பாத்தி , நாண் ரொட்டிக்கு பொருத்துமான சோயா பனீர் மசாலா : இப்படி செய்தால் 10 நிமிடத்தில் வேலை முடிஞ்சிடும்..!
மினி ஊத்தப்பம் செய்முறை:
ஸ்டெப் 1:
ஓட்ஸை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பான பவுடராக அரைத்துக்கொள்ளவும்
ஸ்டெப் 2:
ஒரு பாத்திரத்தில் பொடியாக அரைக்கப்பட்ட ஓட்ஸ் உடன் ரவையை சேர்த்து கலக்கவும்
ஸ்டெப் 3:
இப்போது அதனுடன் சிறிது தண்ணீர் மற்றும் எடுத்துவைத்துள்ள புளித்த கெட்டித் தயிர் சேர்க்கவும். சுவைக்கு ஏற்ப உப்பு மற்றும் கருப்பு மிளகு சேர்த்து இந்த கலவையை 20 நிமிடத்திற்கு நன்றாக ஊற வையுங்கள்.
also read : ஹோட்டல் ஸ்டைல் சாம்பார் வைக்க வேண்டுமா? இதை ட்ரை பண்ணுங்க...
ஸ்டெப் 4:
ஒரு நான்ஸ்டிக் தவாவில் ஆலிவ் எண்ணெய் தடவி, ஒரு கரண்டி மாவை வட்ட வடிவில் பரப்பபவும். அதன் மீது துருவிய கேரட், பன்னீர், மஞ்சள் மற்றும் பச்சை நிற குடைமிளகாய், பச்சை மிளகாய் ஆகியவற்றை மேலே தூவவும்.
ஸ்டெப் 5:
இப்போது அளவான தீயில் ஊத்தப்பத்தை மூடி வேகவைக்கவும், பின்புறம் பொன்னிறமாக மாறியதும், மற்றொருபுறத்தையும் புரட்டிப்போட்டு வேகவைக்கவும்.
ருசியான இந்த ஊத்தப்பத்தில் உங்கள் குழந்தைகளுக்கு பிடித்த வேறு காய்கறிகளையும் கலந்து கொடுத்து அசத்துங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.